பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 143

அயோக்கியன் கந்தப்பனைத் தேடி ருக்மிணியே ஓடினாள். கந்தப்பன் முன்னே காளியைப் போலே நின்றாள். அவன் இரத்தத்தைக் குடித்து விட்டு, தான் சுமக்க வாய்த்திட்ட பழி பாவங் களுக்கெல்லாம் பரிகாரமாகத் தன் கணவனின் இரண்டாவது மனைவியின் குழந்தையை மீட்க வேண்டுமென்ற வெறியுடன், தன் கற்பைப் பணயம் வைத்தவளாகப் பத்ர காளி மாதிரி அவன் எதிரிலே நின்றாள்; அவனைக் கடித்துக் குதறி அவனது குரல் வளையைப் பிடித்துத் தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ள வேளை பார்த் தாள்.

கந்தப்பன் பேச்சு மூச்சின்றி, அடிபட்ட வேங்கையாக மண்ணில் சாய்ந்தான்.

போலீஸ் வந்தது. .

குழந்தை திரும்பியது . ஜெயந்தி, “உன்னுடன் எனது வாழ்வின் செளபாக்கியத்தைப் பகிர்ந்து கொண்டு வாழ் வதில் எனக்கு இனி எவ்வித ஆட்சேபணையும் இல்லை!” என்பதாக ருக்மிணியிடம் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் கெஞ்சின்ாள்.

ருக்மிணி மறுத்து விட்டாள். விதி மறுபடி சிரித்தது. அதோ, சமயபுரத்தாளை முத்துப் பல்லக்கில் தரிசிக்கப் புறப்பட்டுவிட்டாள் ருக்மிணி!...

ருக்மிணியின் மனித லீலை !

மகாகவியின் நூற்றாண்டு விழா நிறைந்துவிட்ட போதிலும், பர்ரதியை ந்ன்றியறிவு கொண்ட எந்திப்