பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

பிடத்தக்க அந்தப் பாத்திரமே குறிப்பிட்ட அந்த வாழ்க்கைக்கு ஜீவன் ஆகிறது : நாயகனாகவோ, நாயகி யாகவோ ஆகிறது. சம்பந்தப்பட்ட அப்பாத்திரம், குறை நிறையோடு சீரடையவும் செம்மைப்படவும் தூண்டுகிற, இன்றேல், தூண்டப்படுகின்ற எந்த ஒரு நிகழ்ச்சியா னாலும். எந்த ஒரு பேச்சானாலும், அது உயிரோட்டத் துடன் அமைந்திருக்கும் பட்சத்தில், அந்த நிகழ்ச்சி, அல்லது, அந்தப் பேச்சு அந்தப் பாத்திரத்தின் குணச் சித்திரத்தை விரிவாகவும் முழுமையாகவும் படம் பிடித்துக் காட்டவும் உதவி விடும். பின், அப்பாத்திரம் தனித்து நின்று ஒளிகாட்டவும், தனித் தன்மையுடன் வழிகாட்ட வும் கேட்கவேண்டியதே இல்லை !

நவீன இலக்கியத்தின் மிக நவீனமான விதிமுறைகள் இங்ஙனமாகவே அமைநதிடல் வேண்டும் :- இதுவே என் னுடைய திறனாய்வு நெறியின் நியாயமான முறையாகவும் அமையும் !

இவ்விதியின்படி. பத்ரகாளி ருக்மிணி, என் இலக்கிய மனத்திடைப் புனையா ஒவியமாகவே காட்சி தருகிறாள்!

ருக்மிணி ஒரு சித்திரப்பெண் ; விசித்திரப் பெண்ணும் அவளே! அவள் என்னென்னவோ கனவுகளைக் கண்டாள். ஆனால், அக்கனவுகளில் ஒன்று கூட மருந்துக்கோ, அல்லது. சாஸ்திரத்துக்கோ கூட, பலிக்கவில்லை :கொண்டவன் அவளை ரத்துச் செய்தான் ; பெற்ற குழந்தையை விதி அவளிடமிருந்து ரத்துச் செய்தது. மனம் அவளை அரைப் பைத்திய நிலையில் அல்லாடித். தள்ளாடி அலைக்கழிக்கவும் தப்பி விடவில்லை ! எல்லா வினைகளும் தீர்ந்து, அவள் மனம் அவளுக்கு நல்ல நிலையை உண்டாக்கிக் கொடுத்த போது, அவள் தன் நிலையையும் தன் சோகத்தையும் சோதித்து உணர்கிறாள் அப்போது, தன் இடத்தைப் பற்றியிருந்த ஜெயந்தியின் மூலம் ஒர் அதிர்ஷ்டம் தன்னைத் தேடி வருகையில், அப்பாக்கியத்தை உரிமையுடன் ஏற்கவோ, உறவுடன்