பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 149

அங்கீக்கரிக்கவோ அவளுடைய பெண்மை மறுத்து விடுகின்றது ; அவளது பெண்மை ஆண்மையுடன் மறுத் தளித்து விடுகிறது -அந்த இடத்திற்கு இனிமேல் நான் முற்றிலும் தகுதியற்றவன்’.. இங்கேதான், ருக்மணியின் பெண்மனத்தின் இயற்பண்பு வாய்மையியல் (Naturalism) துலாம்பரமான பரிசுத்தத்தோடு பொலிவடையவும் செய்

கிறது : இப்பொலிவிலேதான், ருக்மிணியின் பொலிவும் சிறப்பும், சீர்மையும் ஒரு சமூக ஆவணமாக விளங்கக்

3. கூடிய வாய்ப்பும் வசதியும் ஏற்படுகின்றன ; ஏற்படுத்தப்

SFTSS. Seit GGuussr (Sakitga Academg) euuff அங்கீகாரத்தைப் பெற்ற திறனாய்வாளர் டாக்டர் மா. இராமலிங்கம் (எழில் முதல்வன்) பரிசில் பெற்ற தமது ‘நாவல் இலக்கியம்’ என்னும் திறனாய்வு நூலில் பேசுகிறார்.

‘மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் நடக்கும் போராட்டம் நிரந்தரமானது. வெவ்வேறு வடிவத்தில் என்றென்றும் அழியாமல் இருந்து கொண்டே இருப்பது. தனி மனிதச் சிந்தனையும் கூட்டுச் சிந்தனையும் எதிரெதி ராக முரண்படுவதையே உலக வரலாற்றில் காண் கின்றோம். இம் முரண்பாட்டில் மனிதனுக்குச் சமுதாயம் ஒடுங்கிப் போவதையும், சமுதாயக் கட்டுக் கோப்பிற்கு மனிதன் இணங்கிப் போவதையும் மாறி மாறி அறியலாம். மனித-சமூகப் போராட்டம் நீதிமன்ற விசாரணைகள் மூலம் பழைய நாடகங்களிலும் புதிய திரைப்படங் தவிலும்கூட காட்டப்பட்டு வந்தன. இப்போது அங்கே யும் வழக்குமன்றக் காட்சிகளுக்கு வரவேற்பில்லாமல் போய் விட்டது போராட்டத்தை அதன் நேரிடை வளர்ச் சியை ஒட்டிச் சித்திரிக்கும் போக்குத்தான் இந்த நவீன யுகத்தின் பாற்பட்ட நவீனங்களிலும் காணப்படுகிறது, இந்நிலையிலே, மனிதனுக்கும் சமூகத்துக்கும் இடையில் நிகழும் பாதிப்புக்களைச் சித்தரிப்பதிலேதான் சமுதாயப்

ஜெ-10