பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

பின்னணி நாவலின் சிறப்பு மரியாதை பெற முடியும் ; மதிப்பும் பெற இயலும் அல்லவா ?”

பத்ரகாளி ருக்மிணி !

இப்போது, பக்ரகாளியின் கதை நாயகியான ருக்மிணியைப் பண்பு நிறைந்த தமிழ்ச் சமுதாயத்தின் வீரம் நிறைந்த தமிழச்சியாகவும் நாம் தரிசிக்கிறோம் :அவள் இப்போது ஒரு காளிபோலவே சமூக விரோதியான சமூகத் துரோகியான கந்தப்பனின், முன்னிலையில் தோன்றுகிறாள் ! சமுதாயத்தின் சீர்கேடுகளைச் சாடும். சமூகப் பிரக்ஞை பூண்ட சமுதாயப் பிரதிநிதியான அவள் அநீதியைச் சாடுவதற்கு நீதி வடிவான காளியாக உருக் கொள்வதில் அதிசயம் இருக்க முடியாது !

படித்த அயோக்கியனான கந்தப்பன், அடிநாளில் தன் முதலாளியின் மகள் ஜெயந்தியிடம் தகாத முறையில் நடக்க முயற்சி செய்ததற்குத் தண்டனை அனுபவிக் கிறான் ; ஆனால், அத் தண்டனைக்குப் பழிக்குப் பழி வாங்க, பழி பாவத்துக்கு அஞ்சாமல் வெறி கொண்டு திரிகிறான். கணேசனின் இரண்டாவது மனையாட்டி யான ஜெயந்தியின் குழந்தை ரமாவைக் கடத்திச் செல். கிறான் : ஜெயந்தி மட்டுமே நேரில் வந்து குழந்தையை அழைத்துக் கொண்டு செல்லலாம் என்பதாகச் சேதியும் அனுப்புகிறான். இந்நிலையில்தான், எல்லாக் கதையையும் அறியும் ருக்மிணி, ஒரு தியாக நிலையில் ஜெயந்தியின் சார்பிலே கந்தப்பனைத் தேடிச் செல்கிறாள் ! அவளு. டைய அழகான நெஞ்சம் இடை நடுவில் அலங்கோலம் அடைய நேர்ந்ததற்கே, கந்தப்பன் யாரோ அபலை ஒருத்தியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற காட்சியை அவள் நேருக்கு நேராகப் பார்க்க நேர்ந்தது தானே முழு முதற் காரணமாக அமைந்தது :- தீவர்த்தியுடன் கந்தப்பனை இருளிடை நெருங்கினாள். திவர்த்தியால் அவன் உடலைச் சுட்டாள். அவன் மேல் பாய்ந்தாள்.