பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 151

ஆவேசம் பிறந்தவள் போல், அவனைக் கீழே

தள்ளி அவனுடைய குரல்வளையைக் கடிக்கத் தொடங்கினாள் ருக்மிணி ... அவன் - கந்தப்பன் மரன வாயிலில் நின்று அலறுகிறான் - அந்நேரத்தில்

தான், கணேசன் போலீஸ் உதவியுடன் அங்கே தோன்று கிறான் :- ருக்மிணி, குழந்தை ரமாவைத் தேடிக் கண்டு பிடித்துக் கணேசனிடம் கண்ணிர்க் கோலத்தோடும் காளிக்கோலத்தோடும் ஒப்படைக்கின்றாள் !

“...அலமுவை நான் கொல்லலை ; அதனால் ஏற்பட்ட அபவாதம் இதனால் மறையனும் ரமாவைக் காப்பாத் துற வேகமே, அலமுவினால் நான் ஏற்ற அவப் பேரைத் துடைத்துக் கொள்ளத் துடித்த துடிப்பினாலே எனக்கு உண்டானதுதான் !...”

“அன்பளித்து விட்டாய் காளி ! ஆண்மை தந்து விட்டாய் !”

பெண்மைக்கு வாழ்த்துப் பாடிய பாரதி இங்கே பெண்மையில் ஆண்மை சிறக்கவும் நிறக்கவும் வாழ்த்துப் பாடிவிடவில்லையா ?

உண்மைதான் ! ருக்மிணி தமிழச்சிதான் !...

உண்மைதான் - மகரிஷி நல்ல தமிழ் நாவலாசிரியர் தான் !

தமிழ்ச் சமுதாயம் மகரிஷியையும் ருக்மிணியையும் மனிதாபிமானத்துடனும் சமூகப்பிரச்சினையுடனும் மனப் பூர்வமாக வாழ்த்தும் ! C)