பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




9. கல்யாண முருங்கை !

‘பாலகுமாரன் :

சமுதாயம் ஒரு சைனா பஜார் !...

நீண்ட நாட்களுக்கு முன்னர், கலைமகள் பத்திரி கையில் நாவல் பிறந்த கதை நீண்டு, தொடர்ந்து, முடிந்தது. என்னையும் கேட்டிருந்தார்கள். சமுதாயம் ஒரு சைனா பஜார்’ என்கிற என்னுடைய நாவல் பிறந்த கதையை எழுதினேன். சிந்தனையைத் தூண்டக் கூடிய இந் நவீனம்,முன் நாளைய அமைச்சர் பூவராகன் அவர்கள் முன் நாளிலே நடத்தி முடித்த மணிக் கொடி’ நாளேட்டுக் கென்று பிரத்தியேகமாக எழுதப் பட்டது ; பின்னர், அது நூல் வடிவெடுத்து நாவலாகவும் வெளி வந்தது.

அதில் நான் சிந்தித்த எண்ணங்களை உங்கள் முன்னிலையில் படைக்க வேண்டிய சூழ்நிலை மீண்டும் இப்போது உருவாகியிருக்கி திது :

“...சமூகம் என்பது எது? நானும் நீங்களும் சேர்ந்தது சமூகந்தான் ; நம்மோடு மற்றவர்களும் சேர்த்தி. சமுதாயத்தை மனிதர்கள் உருவாக்குகிறார்கள் ; மனிதர் களைச் சமுதாயம் உருவாக்குகிறது !... சமூகமும் சமூகத் தின் மனிதர்களும் இப்படியாக, ஒன்றில் ஒன்றாகப் பின்னி, ஒன்றுக்கு ஒன்று ஆதாரமாகிப் பிணைந்தும் பிணைக்கப்பட்டும், உயிரும் உயிர்ப்புமாக நிலவுகிற, நிலவக்கூடிய, நிலவ வேண்டிய இந்த ஒட்டுறவு சமூகத்