பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 155

கலைஞர் போன்றோர் எழுதி வருவது தருமம் ஆகாது : அவ்வாறு, சமுதாயத்தின் கட்டமைப்பில், கட்டுக்கோப் பற்ற முறையில், முறைதவறிய கீறல்கள் விழுந்து பதிவதற்கே மூலகாரணமான குற்றவாளிகள், அந்தச் சமுதாயத்தில் உயிர் வாழ்கிற மனிதர்களே அல்லவா? வெகு சாதாரணமான, வெகு நியாயமான இந்த நியாயம் ஏனோ, இன்னமும் கூட வெகுபேர்களுக்குப் புலனாகவே

இல்லை :- புரியவும் இல்லை :- மறந்துவிடப் போகி நீர்கள் : சமுதாயம் என்பதெல்லாம் மனிதன்தான் ; மனிதனேதான்... மனிதன் இல்லையேல், சமுதாயம்

எங்ஙனம் உருவாக முடியும் ?...

“எழுத்தாளன்தான் சமூகத்தின் காவலனாக விளங்கு வான் ; விளங்குகிறான் ; விளங்கவும் வேண்டும். ஆகவே, தான், சமூகத்தின் ஆரோக்கியமான வாழ்விலும் பண் பான வளர்ச்சியிலும் எழுத்தாளனுக்குரிய பங்குப்பணி கூடுகிறது ; கூடுதல் அடைகிறது. அப்படியென்றால், கணத்துக்குக் கணம் முன்னேறிக் கொண்டேயிருக்கின்ற இந்த விஞ்ஞானபுகத்தின் சந்தியிலே, மாற்றமுடியாத இந்த ஜனநாயக சோஷலிஸ் யுகத்தின் பின்னணிச் சூழலோடு மாறிவருகிற இந்தத் தமிழ்ச் சமுதாயத்தின் அங்கமெனத் திகழும் உண்மையான எழுத்தாளனின், அதாவது, உண்மையாகவே எழுத்தை ஆளுகின்ற அந்தச் சமூக மனிதனின் பொறுப்பு என்ன ?- சிந்தித்தேன் : அப்படிச் சிந்தித்ததன் நல்ல விளைவாகவோ, அல்லது எதிர் விளைவாகவேதான், சமுதாயத்துக்கு உவமை சொல்லச் சைனாபஜார்- சீனத்துக் கடைவீதி ஓடோடி வந்ததோ ?- சைனா பஜார் ஒய்யாரக் கொண்டையாக அழகு காட்டித் தொலையட்டும் உள்ளே, ஈரும் பேனும் மொய்த்துப் பிடுங்கித் தீர்க்கட்டும் ; நமக்கு அக்கறை இல்லை : அனுதாபமும் கிடையாது ! ஆனால், சமுதாயம் அவ்வாறு, சைனாபஜாராக விளங்கலாமா ? சமுதாயத்தை அப்படி வெறும் ஒய்யாரக் கொண்டையாக போலித்