பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

தன்மையுடன் விளங்கச் செய்யலாமா ? அவ்வாறு விளங்கும் பட்சத்திலே, அது சமுதாயத்தின் குற்றமாகுமா? எய்தவன் இருக்க, அம்பை நோவது தர்மமாகுமா ?

சமுதாயம் ஒய்யாரக் கொண்டையான சைனா பஜாராக

விளங்குகிறதென்றால், அந்தப் பழிபாவத்துக்கு அச் சமுதாயத்தின் அங்கமெனத் திகழும் மனிதன்தானே

பொறுப்பாளி ஆகவும் வேண்டும் ? இதுதானே சமூக தர்மமாகவும் விளங்கவும் முடியும் ?

“... ஆகவே, சமூகத்துக்கு உருவைக் கொடுத்து, உள்ளத்தையும் கொடுக்கும் இலக்கியம், கலாச்சாரம், அரசியல் பொருளாதாரம், நாகரிகம், பண்பாடு போன்ற உலகரீதியான நடைமுறை வாழ்வியலின் அறிவு பூர்வ மானதும் உணர்வு பூர்வமானதுமான பல்வேறு அரங்கங் களினின்றும் புற்றீசல்களாகப் பரவிச் சமூகத்தில் ஊடுருவிச் சமூகத்தின் நலவாழ்வைச் சிதைத்துச் சோதித்துவிட்டு, கடைசியில், தாங்கள் செய்த பாவங்களையும் அநியாயங் களையும் அதர்மங்களையும் அட்டூழியங்களையும் ஒட்டு: மொத்தமாகச் சமூகத்தின் தலையிலே போட்டுவிட்டுத் தப்பித் திரியும் வேடிக்கை மனிதர்களான சமூகத் துரோகி களுக்கு- சமூக விரோதிகளுக்குச் சமூகப் பொறுப்பை உணர்த்திட வேண்டியது, பொறுப்புமிக்க எழுத்தாளர் களின் பொற்பு மிகுந்த கடன் ஆகிறது அல்லவா ?...” -

கலைமகளுக்காக அன்று சிந்தித்தவன், இன்று கலை மகள் சார்ந்த சமுதாயத்துக்காகவும் சிந்திக்கிறேன்.

சமூகப் பொதுவாழ்வில் விதிக்கும் சட்டத்துக்கும். டிமிக்கி கொடுத்துப் பெரிய மனிதர்களாக வேடம் புனைந்து சமூகத் துரோகிகளும் சமூக விரோதிகளும் சமுதாயத்தின் வீதிகளிலே சுற்றித் திரிகின்றமாதிரி, இப் போது எழுத்துத் துறையிலும் சமூக எதிரிகள் புற்றீசல் களாகக் கிளம்பத் தொடங்கிவிட்டனர் - நச்சுக்காற்றுப் படும்போது, நல்ல மனமும் நோய்வாய்ப் படுவது இயல்பு தான் இயல்பு மாறிய, பண்பாடு தாண்டிய, மரபு மீறிய,