பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 157

நெறிமுறை தவறிய முரண்பாடுகொண்ட ஆபாசமான எழுத்துக்களின் வாயிலாக இளந்தலைமுறையினரைத் திருப்பிவிட முயன்ற எழுத்துத் துரோகிகளின் கூட்டம் இன்னமும் வேரறுக்கப்படவில்லை : குற்றவாளிகளைத் தண்டிக்கச் சட்டமும் விதியும் இனியாகிலும் விழித்துக் கொண்டால்தான், சமூகப் பொது வாழ்வின் துரோகிகள் தண்டிக்கப்படுவது மாதிரி, எழுத்துச் சமூகத்தின் எதிரி களும் தண்டிக்கப்பட முடியும் :- அந்த விடியல் வெகு துாரத்தில் இல்லையென ஆறுதல்சொல்ல அன்று ஒரு பூவை முன் வந்த மாதிரி, இன்று ஒரு துர்வாசரும் முன் வந்திருப்பது வரவேற்புக்குரிய நடப்புதான் !.

O குற்றவாளிகள், நீதிபதிகளாக ஆக வேண்டுமா ? ஊஹூம் ; கூடாது ! கூடவே கூடாது !

O பாவிகளை ரட்சிக்கச் சிலுவையைச் சுமக்கும் இயேசு நாதர்கள் இன்று நமது அருமைத் தமிழ்ச் சாதிக்குத் தேவை இல்லை ; தேவையே இல்லை !

O நல்ல எழுத்தாளர்கள் வாழ்ந்தார்கள் ; வாழ் கிறார்கள் ; வாழ்வார்கள் !

O இது நான்மறைத் தீர்ப்பு.

O இதுவே சமூகப் பொதுமக்களின் தீர்ப்புங்கூட !...

விஜி என்கிற விஜயலக்ஷ்மி !

தமிழ் மனம், தமிழ் மணம் கமழ்ந்திடச் சிலிர்க்கிறது.

அங்கே, தமிழ்க் கடவுள் முருகு எனும் அழகு பொலித் திடச் சிரிக்கிறார்.

எனக்கும் சிரிக்கத் தெரிகிறது.