பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

“தமிழோடு விளையாட ஓடோடி வா ! என்று சக்தி உமைபாலனை அழைத்த என க்குச் சிரிக்கத் தெரிவதில் நியாயம் இருக்கிறது : நியாயப்படுத்தத் தேவையில்லாத நியாயம் இது -ஏன், புரிகிறதோ ?- நானும்தான் சக்தி உமைபாலன் ! ;

சுயப்பிரக்கினை திரும்புகிறது.

திரும்பிப் பார்க்கிறேன் :

அதோ, பாலகுமாரன் !

இப்போது, என்னுள், கீதாஞ்சலி தரிசனம் தருகிறது : “இந்த வாழ்க்கையின் வாசற்படியை நான் எப்பொழுது தாண்டி வந்தேன் என்பது எனக்குத் தெரியாது. நடுக்காட்டிலே, நள்ளி ருளிலே மலரும் பூ முகை போல, எல்லையற்ற இந்த மாயையின் நடுவே, என்னை விகசிக்கச் செய்த சக்தி எது ? காலை ஒளியினைக் கண்ட போது, இவ்வுலகிற்கு நான் அந்நியன் அல்லன் என்பதையும், நாம ரூபமற்ற மர்மமான சக்தியே எனது அன்னையின் உருவத்திலே என்னை ஏந்திக் கொண்டிருப்பதாக ஒரு கணத்தில் உணர்ந்தேன். அதே போல்; நான் அறியாத அதே சக்தி என்றுமே எனக்கு அறிமுகமான உருவத்தில் மீண்டும் தோன்றும். நான் இந்த வாழ்க்கையை விரும்பும் காரணத்தாலேயே, மரணத்தையும் நேசிக்கிறேன். குழந்தைக்குப் பால் கொடுக்கும் தாய், அதை வலது ஸ்தனத்திலிருந்து எடுத்த வுடன், குழந்தை வீரிட்டு அழுகிறது . மறுகணத் தில், இடது ஸ்தனத்தில் ஆருயிருக்கு அமிழ்தம்

கிடைக்கும் என்பதை அது உணர்வதில்லை !...” காட்சி மாறுகிறது.

இப்போது