பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 159

ரத்தச் சிகப்பாகப் பூப்பூத்து, இரண்டு உள்ளங்கை அகலத்திற்கு இலையோடு கூடி, மரமும் இல்லாமல், செடியும் இல்லாமல், இயற்கையின் படைப்பில் வித்தியாச மாக வளர்ந்து விட்ட தாவரம் ஒன்று, ஒடித்து விறகு ஆக்கவும் முடியாமல், இழைத்துப் பொருளாக ஆக்கவும் இயலாமல், சின்னஞ் சிறிய புயலுக்குக் கூட சரிந்து விடக் கூடிய மனப்பான்மையோடு, பச்சைப் பசேலென்று குடை விரித்து, தீயில் ஒர் அழகாகவும், தீயே ஒர் ஒப்பற்ற அழகாகவும் விளங்கும் நந்தலாலாவை நினைவு கூர்ந்து, நினைவூட்டுகிற பாவனையில், காற்றை எதிர்கொள்ளச் சக்தி இழந்து, காற்றிலே அசைந்தாடிக் கொண்டிருக் கிறது.

அதுதான், கல்யாண முருங்கை !

நான் கேட்டது உண்டு.

கண்டது கிடையாது.

ஆனால் :

பாலகுமாரனின் கலியாண முருங்கையை நான் கண்டிருக்கிறேன் ; கேட்டிருக்கிறேன்.

ஆகவே, விஜி எனப்படும் விஜயலஷ்மியைப் பூரண மாகவும் பரிபூரணமாகவும் நான் அறிந்தவன் என்பதும் வெளிப்படை ஆகிறது. -

இப்போது நீங்கள் விஜயலஷ்மியின் வித்தியாசமான, ஆனால், முரண்பாடில்லாத, உண்மையான கதையையும் கேட்டு வையுங்கள்:

ரிஷி மூலம் பார்க்கக் கூடாதாம் ; கேட்கவும்: கூடாதாம்,