பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

ஆனாலும், விஜயலஷ்மியின் முன் கதை, பின் கதையில் அபாயம் இருந்தாலும்,அபாய அறிவிப் புக் கிடையவே கிடையாது.

காரணம் : விஜி நூறு பேருக்குத் தெரிந் தவள். ஆகவே, அவள் எப்படியோ இருந்தா ளென்றும், அப்படி ஏனோ இருந்தாளென்றும் நீங்கள் நம்பினால், அந்நம்பிக்கை அவளை மோசம் செய்யாதது போலவே உங்களையும் மோசம் செய்து விடாதென்றும் நீங்கள் நம்ப லாம் ; நம்பவும் வேண்டும்.

புது மாதிரியான, புதுப் புதுத் தத்து விசாரங் களிலும், விசாரணைகளிலும், விவேகங்களிலும் விதரணைகளிலும் பட்டுப் பழகிப் போன, பட்டும் படாமலும் பழகிப்போன, முப்பத்தாறு வயது டைய விடுகதைக் கன்னியான விஜி என்கிற விஜயலஷ்மிக்கு எழில் வேங்கடமலை மேலே திருப்பூட்டும் பாக்கியம் பெறுகிறவன்(ர்) பெயர் தான் ரங்கா என்பது. இப்போது விஜியால் நாற்பது வயதான ரங்காவை மறக்க முடியாது ; விதியை அதாவது, கலியாண விதியை மீறியோ, மீறிக் கொண்டோ ரங்காவையும் அவளால் மறக்க முடியாது. -

உங்கட்குப் புரிந்திருக்கும்; தெரிந்திருக்கும்!-- விஜயலஷ்மிக்குப் பிச்சையைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. பிச்சை: ‘எங்க அம்மாவுக்குப் பகவான் போட்ட பிச்சை நான் “ அவன் குளித்து ஈரத்துண்டோடு மாத்ரூ பஞ்சகம்’ சொல்லியிருக்கிறான் ; அவளுடைய தங்கமான கழுத்தைக் கட்டிக் கொண்டு சல்லாபமாகத் தூங்கியிருக்கிறான்.

நடுவிலே