பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

அத்தையின் சொற்படி, குத்துவிளக்குப் பூஜை நடக்கிறது.

பூஜைக்கு நாயகி பரமேஸ்வரி அல்லள்; விஜி தான் நாயகி. அவள் தானே கதைக்கு நாயகி ? தன் எதிரே எரியும் தீபத்தை உற்று நோக்கு கிறாள். ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு சுடர் மாறிக் கொண்டே இருக்கிறது; மனிதர்களைப் போல், உலகத்தைப் போல், பிரபஞ்சத்தைப் போல் மாறிக் கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு வினாடியும் உடலும் மனமும் மாறுகின்றன. நேற்றைய விஜி வேறு; இன்றைய விஜி வேறு. இதில், உண்மையான விஜி-விஜியலக்iமி யாராம்?

கல்பாவுக்குச் சாமி வருகிறது.

வினையே விதி ஆகிறது.

பூஜைக்குத் தடை.

“குழந்தை வேண்டாம், ரங்கா. எங்காவது பிறந்த குழந்தையைத் ‘தத்து எடுத்துக்கலாம்!”

திடீரென்று கிழவி ஆகிவிடுகிறாள் விஜி என்னும் படியான விஜயலக்iம். கண்களை மூடிக் கொள்கிறாள்.

கல்யாண முருங்கை மரங்கள் வரிசை வரிசை யாகத் தோன்றுகின்றன!

விஜி ஓர் அதிசய ராகம்!

உங்களில் சிலருக்கோ, , பலருக்கோ இந்தக் கதையிலே ஒன்றுமே இல்லையென்று, அதாவது, கதை யென்று ஒன்றுமே இல்லையென்று தோன்றக் கூடும்.