பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 171

மூன்று பேரும் மூணு விதம்... இங்கே ரூல்ஸ்னு ஒண்னு போட்டிருக்கு. அதை மீறிட்டு, மறுபடி மரபுக்குள்ளே எட்டிப் பார்க்கிற நான்; மரபுக்குள் செளக்கியம் கருதி, உள்ளே பூந்துண்டு, வெளியே மீற முடியலையேன்னு தவிக்கிற கல்பா; மீறுவது, மீறாம இருக்கிறது இரண்டை யும் யோசனை பண்ணாம, இழுத்த இழுப்புக்குப் போய், அப்பப்ப செய்ற காரியத்துக்குச் சமாதானம் சொல்ற சரோ இப்படி இந்த மூணு பேர் புத்தியும் உங்க புத்தியும் உலக புத்தியும் என் நினைவைத் தாக்காதா, குழப்பாதா? ஸோ... குழந்தை வேண்டாம், ரங்கா!... வேணும்னா எங்காவது பிறந்த குழந்தையைத் தத்து எடுத்துக்கலாம். சாப்பாட்டுக்கு இல்லேன்னு தவிக்கறதைக் கூட்டிண்டு வந்து சாப்பாடு போடலாம். சாதம் போட்டு வளர்க்க லாம். அது பிறந்தாச்சு; இனி, வளர்ச்சியைத் தடுக்க முடியாது. வளர, ஜலம் ஊத்துவோம். வெப்பமோ, விஷக்காத்தோ, அது உறிஞ்சி, அதை ஏத்துண்டு வளரட்டும்!”

“அவ்வளவு வெறுப்பா வாழ்க்கை மேல... விஜி ?”

“வெறுப்பு எங்கானும் தத்து எடுத்துக்குமா? இது “லவ் ரங்கா... நிஜமான நேசம்!... குழந்தை கேள்வி கேட்டா, பளிச்சின்னு பதில் சொல்லத் தெரியுமா உங்களுக்கு : தீர்மானமா ஏதும் தெரியுமா? தெளிவுபடுத்த வலிவுண்டா ? சோற்றுப்பாடே கதியென்றால், ஞானமும் தெளிவும் என்னிக்கு வரும்? எந்தப் புராணம், எந்தக் கடவுள் உசத்தி? எல்லாமே குறைப்பட்டிருக்கு இன்னும் தேடறதா சொல்றது, மறுபிறவி வேண்டாம்னு கதறிக் கதறிச் சொல்றது. இந்தக் கதறலுக்கு என்ன அர்த்தம்? இது தப்பான இடம். இது பனிஷ்மென்ட் ஏரியா!’ அப்படித்தானே ?... பனிஷ் பண்ண, குழந்தை பெத்துக்கவா ?. அது பாவம் இல்லையா, ரங்கா ?”

“சரியான கோழை நீ. விஜி “