பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

“அப்ப, வீரம் எதுன்னு சொல்லனும்! கோழைத் தனத்தையே வீரம்னு லேபிள் ஒட்டிக் காட்டக் கூடாது. ஏன், உங்களுக்குப் பிறந்த குழந்தையைத்தான் நீங்க லவ்’ பண்ண முடியுமா? வளர்க்க முடியுமா ? உண்மையான குழந்தை ஆசை இப்படித் தானா ?... அந்த மாதிரி வளர்க்கிற ரெஸ்பான்ஸ்பிலிட்டி கூட எதுக்கு ?... சும்மா இருக்கலாமே !” -

“எப்படிச் சும்மா இருக்க முடியும் ? வாடின பயிருக்கு ஜலம் ஊத்தற காரியம்தான் அது. மத்தப்படி, மண் குணம் தாவர இயல்பு. ஜலம் ஊத்தி மாத்த முடியாது. ஜலம் ஊத்தாம வளரவும் வளராது!”

“டக்குன்னு கிழவியாய்ட்டா விஜி “... “எப்பவோ ஆய்ட்டேன், ரங்கா! கிழத்தனம் மனசுலே விழுந்தாச்சு. இருக்கறதைச் சரி பண்ணலாம்னுதான் ஒளவையார் கிளம்பினா; கிழவி வரம் கேட்டா !...இங்கே, வரம் கேட்க சாமியில்லை; உங்களைக் கேட்கறேன்... நமக்குக் குழந்தை வேண்டாம், ரங்கா !”

ரங்கா மெளனமாகப் போய் நாற்காலியில் சரிந்து உட்காருகிறார்.

விஜி குத்திட்டுச் சுவரோரம் அமர்கிறாள். எதிர் வீட்டுக்குப் பெயிண்ட் பூச்சு நடந்து கொண் டிருக்கிறது.

ஒட்டை வீட்டுக்குப் பெயிண்ட்’ பூசி என்ன பயன் ? விஜி எனப்படும் விஜயலக்ஷ்மி கண்களை மூடிக் கொள் கிறாள்: .

மறுபடி மலைப்பாதை, சுனைநீர், குளிர்காற்று; வரிசை வரிசையாய் நகர்ந்த கல்யாண முருங்கை மரங்கள் தோன்றுகின்றன : - - -

சிவந்த பூ, பச்சை இலைகள், தொலைவிலிருந்து பெரும் பசுமையையும், மலர்ச்சியையும் காட்டும் மரம்...