பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 173

இழைக்கத் தாங்காது; காற்றை எதிர்த்து நிற்காது; காய் தராது; கனியாது...பசேலென்று நிற்கும் மனித வாழ்க்கை மாதிரி...!

வாழ்வு : ஓர் ஆய்வுக் கூடம் !

வாழ்க்கை ஒரு சோதனை.

வாழ்க்கை ஒரு சாதனை.

வாழ்க்கை ஒரு யாத்திரை.

வாழ்க்கை ஒரு விளையாட்டு.

வாழ்க்கை ஒரு யோகம்.

வாழ்க்கை ஒரு விதி.

வாழ்க்கை ஒரு வினை.

வாழ்க்கை ஒர் ஆரம்பம்.

வாழ்க்கை ஒரு முடிவு.

இவ்வாறு பல்வேறு நிலைகளில் நிர்ணயம் ஆகின்ற, நிர்ணயப்படுத்தப்படுகின்ற வாழ்க்கைக்கு ஒர் ஆரம்பம் இருப்பது போலவே, அதற்கு ஒரு முடிவும் உண்டு என்பது தான் தத்துவஞானிகளின் கணிப்பு. சிந்தனையாளர்களின் கருத்தும் இவ்வாறாகவே அமைவதில், கருத்து வேறு பாடுகள் இருக்க முடியாதுதான். இது வாழ்க்கையின் நியதி மட்டுமல்ல ; உலக வாழ்க்கையின் இயல்பும் இதுவே தான். -

ஆனால், ஒன்று : -

ஆரம்பத்தைத் தொடுகின்ற முடிவின் விதி இயற்கை ‘யானது. -

சரி. முடிவைத் தொடுகின்ற ஆரம்பத்திற்கு என்ன பெயர்? அதுதான் விஜி ! . . . .” அவள்தான் விஜயலக்ஷ்மி. நான் சொல்லவில்லையா ?