பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

விஜி ஒர் அதிசயமான ராகம் ! பாலகுமாரன் விளம்பவில்லையா ? விஜயலக்டிமி அதிசயமான ரகம் !

உண்மையும் அதுதான் :- விஜி என்கிற விஜயலக்ஷமி மேற்கொண்ட வாழ்க்கையின் முடிவிலேதான் அவளுடைய மேற்கண்ட வாழ்க்கை ஆரம்பமாகிறது, ஆடத்தான் ஒரு வாழ்க்கையென்றால், அடங்கவும் ஒரு வாழ்க்கை வேண் டாமா ? ஒடக் காண்பது பூம்புனல் உள்ளம் ; ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்’ என்பது குறவஞ்சித்திரு மந்திரம் இல்லையா ? ஆடும் வாழ்க்கையை மட்டிலுமே படமெடுத்துப் பார்த்துப் படமெடுத்துக் காட்டிக் கொண் டிருக்கிற சமூகப் பொறுப்பற்ற எழுத்துத் துரோகிகள் ஒரு சிலருக்கு மத்தியில், அடங்கும் வாழ்க்கையைத் துணிந்து சித்திரித்துச் சொல்ல ஒரு விஜய லக்மி அசல் தமிழ்ச் சாதியின் அசல் தமிழச்சியாகவே முன் வந்தது தமிழ்ப் படைப்பிலக்கிய வரலாற்றில் ஒரு பசுமைப் புரட்சியாகவே அமைகிறது.

விஜியின் வாழ்க்கை இயற்கையோடு இணைந்தது ; பிணைந்தது ; ஆகவேதான், மாறுகின்ற இயற்கையைப் போலவே, அவளும் மாறுகிறாள் ; அவளுடைய வாழ்க்கை யும் மாறுகிறது. இயற்கையோடு இணங்கியும் பிணங்கியும் அவள் வாழ்க்கை மாறும்போது, மாறுபடும் போது, அவள் தன் வாழ்க்கையில் ஒத்துப்போகவும் செய்கிறாள். ஒத்துப்போக மறுக்கும் சமயங்களில் அவள் நடப்பு வாழ்க் கையினின்றும், அதாவது, நமது தமிழ் மரபு எல்லை காட்டியும் வகுத்துத் தொகுத்தும் தருளியுள்ள பண்பாட்டு நெறிமுறை விதிகளின்றும் அவள் வினையாக மாறும் போது, அவள் மனத்தால் அவள் மாற்றப்படும்போது, அவள் சகஜமான, யதார்த்த வாழ்விலிருந்துமுரண்படவும் துணிகிறாள் ; ஆனால், அந்த முரண்பாட்டையே தனது வாழ்க்கையாக ஆக்கிக் கொள்ளத் துணியவில்லை :