பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 175

இந்தப் பரிபக்குவத்திலேதான் அவளுடைய பாவப் பரிசோதனைகள் பாவமன்னிப்புப் பெறவும் ஏதுவா கின்றன. அவள் தன்னுடைய வாழ்க்கையில் தேடிப் போய்ச் சந்தித்த, அல்லது, அவளது வாழ்க்கையில் தேடாமலே குறுக்கிட்ட பிச்சை, ராம்குமார், வில்லிங்ஸ் டன்,நாகப்பன் போன்ற விளையாட்டு வீரர்கள், ஆட்டம் முடிந்ததும், விளையாட்டு மைதானத்திலிருந்து நாகரிக மாகவும் நாணயமாகவும் நியாயமாகவும் விலகி விடுவதன் மூலம், அவளுடைய களங்கப்பட்ட பெண்மை, புனர் ஜன்மம் எடுக்கவும் வாய்ப்பு வசதி ஏற்படுகிறது. முன் பின் பழக்கப்பட்ட ரங்கா, முற்றிலும் பழக்கப்படத் துணிந்து, அவளுடைய தங்கக் கழுத்தில் துணிந்து தங்கத் தாலியைக் கட்டவும், அவளைக் கட்டி அணைக்கவும் துணிகிறார் !

முரண்பாடுகள் மட்டுமே வாழ்க்கையல்ல. !

சிபலமும் சலனமும் அடைகின்ற நேரங்களில், மனித மனம் இயற்கையின் இலட்சுமணன் கோட்டிலிருந்து விதியாகவும் வினையாகவும் விலகி முரண்படுவது தவிர்க்கப்படமுடியாத விபத்து மாதிரி. விபத்துக்களுக்கு இடம், பொருள், ஏவல் தெரியாதல்லவா ?- ஆனால், வெறும் முரண்பாடுகள் மட்டிலுமே வாழ்க்கையாக ஆகி. விட்டால், அப்பால் பகுத்தறியும் மனிதர்களுக்கும் பகுத் தறியாத மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கக் கூடும் ?

விஜயலக்ஷ்மி பெண் மிருகமல்ல விஜி மனிதப் பெண்.

அவள் முரண்பட்டாள். அவள் வாழ்க்கையும் முரண்படத் தவற வில்லை. ஆனாலும், முரண்பாட்டின் நிமித்தம் அவள் தன்னு:

டைய வாழ்க்கையை வேசித்தனமாகத் தவறவிட்டு விட வில்லை. -