பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 185

அண்ணலின் அனுபவபூர்வமான, அனுபவரீதியான வாக்கு இது : மனைவி என்பாள் கணவனது ஒப்பந்த அடிமை அல்லள் ; அவள் அவனது தோழி , அவனுக்கு உதவுபவள் ; அவனுடைய இன்ப துன்பங்கள் அனைத்தை யும் சமமாகப் பகிர்ந்து கொள்பவள் ; அவனைப்போலவே அவளும் தன் வாழ்க்கையின் முறையைத் தீர்மானித்துக் கொள்ள உரிமை உடையவள் !”

இப்போது, அகல்யாவை விடவும் உண்மையான வளாகத் தரிசனம் கொடுக்கிறாள் நமது விஜயலக்ஷ்மி : ஆகவேதான், அவளே, பண்பு நிறைந்த நமது சமுதாயத் திற்கு ஒரு சத்தியச் சேதியாகவும் ஆகிறாள்.

பழம்பெரும் இலக்கிய விமரிசகரெனப் பழம் பெருமை படைத்திட்ட க. நா.சு.’ எனப் பழக்கப்பட்டுப் பழகி விட்ட க. நா. சுப்(பி)ரமணியம் விமரிசனக் கலை’ என்னும் செறிவுப் பயன் தரும் தமது நூலில் “இலக்கிய மரபு இல்லாவிட்டால், சோதனை சாத்தியமில்லைகடவுள் இல்லாவிட்டால், கடவுளை மறுக்கும் நாத்திகன் சாத்தியம் இல்லை என்கிற அடிப்படையிலே !’... என்பார்.

உண்மை ; விஜயலக்ஷ்மி சர்வ நிச்சயமாய்ப் பொருந்து வாள் !

நிலையாத மண் வாழ்க்கையின் நிலைத்த நிர்வான நிலை, இப்போது ‘கல்யாண முருங்கை மரத்துக்கும் சொந்தமாகிறது !...

All the best, my dear Brother... 1 O