பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை


தமிழ் எழுத்துச் சமூகத்தில் மஞ்சள் புல்லுருவி களாகவும், தமிழ் மக்கள் சமுதாயத்தில் சிவப்புத் துரோகி களாகவும் அபாய அறிவிப்புச் செய்யப்பட்டுவிட்டவர்கள் இனியாகிலும் அற்பமான குறுக்குவழிப் புகழையும் அநியாயமான வயிற்றுப் பிழைப்பையும் துறந்து, பாவ மன்னிப்புப் பெற்ற பரிசுத்தமான சமூக நலப் பார்வை பெற்று, விழிப்புப் பெற்ற இளைய தலைமுறையினருக்கு மத்தியில் தலை நிமிர்ந்து நடக்க விரும்பினால், அவர்கள் விஜியிடம் பாடம் படித்துக் கொள்வது நலம் பயக்கும் பணியாகவே அமையும்

உள்ளது உள்ளபடி வாழ்ந்த, வாழ்ந்து காட்டிய அதிசயமானதொரு வாழ்க்கைக்குச் சூட்டப்பெற்ற புனை பெயர்தான், விஜி, விஜயலக மி!

ஜகத்குரு ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் சொல்வார்கள்; ‘எண்ணங்கள் இல்லாமல் எந்த ஒரு செயலும் ஏற்படாது!’

விஜியின் எண்ணங்களே விஜிக்கு வாழ்க்கை ஆகிறது; ஆக்கவும் படுகிறது.

நல்ல எண்ணங்கள் சோதிக்கவும், கெட்ட எண்ணங்கள் சோதிக்கப் படவும் நேர்கின்றன.

அக்கினிப் பரீட்சைகள் தொடர்கின்றன.

அக்கினிப் பிரவேசங்கள் தொடர் சேர்க்கின்றன.

விளை பலன்

“டக்குன்னு கிழவியாய்ட்டா விஜி ?”

“எப்பவோ ஆய்ட்டேன், ரங்கா !”