பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 183

ஆகவே, வாழ்க்கையில் நிர்வாணங்களும் நிதர்சனங் களும் கூடி முயங்குவதும் கூடிப் பிரிவதும் இயல்பு ஆகிறது. ஆகவே தான், வாழ்க்கை வாழ்க்கையாகவும் ஆகிறது; ஆக முடிகிறது. இந் நிலையில்தான், வாழ்க்கை

பாவ புண்ணியங்களின் ஐந்தொகைக் கணக்காகவும் ஆகிறது; ஆக்கப்படுகிறது.

ஆலம் தோன்றிய திருப்பாற்கடலிலேதான் அமிழ் தமும் பிறந்தது.

பாவங்கள் தோன்றும் மனத்திலேதானே புண்ணியங் களும் தோன்ற முடியும்?

உதாரணம்: விஜி-விஜயலக்:மி.

விஜியை மறுபடி ஆராய்கிறேன்.

பாடல் வரிகள் சில கண்ணிரில் கரைகின்றன.

‘காமன் வழங்கும் கவலைகள் ஒன்றா?

தரத்தைக் குலைத்துத் தன்மையைக் குலைத்து, நிறத்தைக் கெடுத்து நினைவையும் அழித்து, செய்யும் தொழிலையும் செய்யாதாக்கி, காமக் குரங்கெனக் கண்டோர் இகழ, மாமணி வாழ்வை மண்ணில் வீழ்த்தும்’

அன்றும் இன்றும் என்றென்றுமே நம்முடனேயே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மாண்புயர் அரசவைக் கவிஞர் தந்த காமசூத்திரம் நமது விஜிப் பெண்ணின் கண்களையும் கவர்ந்திருக்கும் போலும்! அதன் விளை வாகவே முரண்பட்ட வாழ்க்கை இருட்டில் முரண்படாத விடியல் ஒளியைத் தரிசிக்கக் கூடிய நல்வாய்ப்பினைப் பெற்றிருப்பாள்ோரங்காவின் ஆசை.வி.ஜி