பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 187

பெற்ற ஒடக்குழல் ஆசிரியரான கவி சங்கர குரூப் அவர் களோடு ஏர்ணாகுளத்தில் அவரது வீட்டில் ஏலக்காய் மணம் கமழ்ந்திட உரையாடிய சமயத்திலும் சிவசங்கரி யின் எழுத்தாற்றல் பற்றிப் பற்றோடும் பாசத்தோடும் உரைத்ததும் உண்டு.

ஆனால், நாட்கள் ஒட ஒட, சிவசங்கரி மிதிலைச் செல்வியாம் கற்பின் கனலி சீதாப் பிராட்டிக்கு விதிக்கப் பட்ட இலட்சுமணன் கோட்டை மறந்தும் துறந்தும் எங்கோ, எங்கேயோ, ஒடிக் கொண்டிருத்த ஒர் அவலத் தையும் அதே கேரளத்து மண்ணில் இருந்தபடியே உணர வேண்டிய துர்ப்பாக்கியமும் ஏற்படாமல் தப்பவில்லை.

தப்புச்செய்து விட்டாள் என் அன்புத் தங்கை !

அருமைமிகு தமிழ் மண்ணுக்குத் திரும்புகிறேன்.

அலங்கோலமாகக் கிடக்கிறது, பால் வாய்ப் பசுந் தமிழின் பண்பு சார்ந்த படைப்பு இலக்கியம்.

பெருமைமிகு தமிழச் சாதியின் பீடுயர்த் தமிழ்ப் பண்பாட்டினை ஈவிரக்கமின்றிச் சோதித்த நய வஞ்சகர்களை நானும் சோதிக்கத் தலைப்படுகிறேன். இலக்கிய வட்டம் க.நா. சு.வோ அல்லது, “எழுத்து’ சி.சு. செல்லப்பாவோ, அல்லது, சமுதாயப் பிரக்ஞை கொண்ட யாருமே தட்டிக் கேட்கத் துணியாத நெருக்கடி யான நேரத்தில், நான் தனித்ததொரு- தனிப்பட்ட தொரு சோதனையாளனாக ஆகிறேன்.

உளவு கிடைக்கிறது.

முதற் குற்றவாளியாகக் கையும் களவுமாகப் பிடிபடு: கிறார். சுஜாதா - சுஜாதா என்றால் கேரளத்தும். பூங்குயில் நட்சத்திரம் குமாரி சுஜாதாவா? அதுதான். இல்லை. :- இது, ரீரங்கம் ரங்கராஜன் எனப்பட்ட சுஜாதாவாம்! பணி புரியும் புங்களுரிலும் ஒரு