பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

மூர்மார்க்கெட் இருக்கக் கண்டு வயிற்றுப் பிழைப்பை மர்மமான நாகரிகப் பாணியில் நடத்திக் கொண்டிருப்ப வராம் :

என் புலனாய்வு மேலும் தொடர்ந்த சமயத்தில், புஷ்பா தங்க(த்)துரை பிடிப்பட்டார் : அப்புறம், இந்து மதி. அந்தச் சமுகக் குற்றவாளிப் பட்டியலில் சகோதரி சிவசங்கரியும் ஏன் இடம் பெற்றார், எப்படி இடம் பெற்றார் என்னும் ஆய்வில் நான் அக்கறையுடன் ஈடு படவும் நேர்ந்தது !

இலக்கிய நீதிக்கு ஒரு விசாரணை !

நான் எண்ணிப் பார்க்கிறேன் ;

தமிழ்ச் சமுதாயத்தின் பொது வீதிகளிலே, பொது மக்களின் நல்லாரோக்கியம் பாதிக்கப்படக்கூடிய சூழ் நிலை உருவாகும் பட்சத்தில்- உருவாக்கப்படும் பட்சத் தில், ஆளுகின்ற அரசு, தேவையான நேரங்களில் தேவைப் படும் நடவடிக்கைகளை எடுத்துச் சமுதாயத்தின் பொது வான, பொதுப்படையான ஆரோக்கியத்தை நல்ல தன மாக ஒரு நிலைப்படுத்தவே முனையும். மக்களின் வாக் குரிமைப் பலத்தில் ஆட்சியை அமைத்துக் கொள்ளுகின்ற அரசு தார்மீகப் பண்பின் கட்டமைப்பில் மேற் கொள்ளு கிற, மேற் கொள்ளத்தக்க ஜனநாயகக் கடன் இது ; கடமை இது - ஆளுகின்ற சிறுபான்மையினருக்கும் ஆளப்படுகின்ற பெரும்பான்மையினருக்கும் ஊடாக ஊடும் பாவுமாகவும், உயிரும் உயிர்ப்புமாகவும் அமை கின்ற, அமைக்கப்படுகின்ற இந்தச் சேதுப் பால'த்தின் ஜீவாதாரத்திலே தான், பொது மக்களின் ஒளிமிக்க எதிர் காலமும், அப்பொது மக்களை ஆட்சி செலுத்துகின்ற அரசின் நல்லெண்ணம் மிகுந்த நல்ல காலமும் விதியாக அமைகின்றன. . & . . . . . ‘.

உண்மைதான்; இவ்விதி, தமிழ்ச் சாதிச் சமுதாயத் திற்கு மட்டுமல்லாமல்: தமிழ்ச்சாதி சமுதாயத்தின்