பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 189

மக்களுக்கும் பரவலாகவும் பான்மையுடனும் பொருந்தும்; பொருந்தவும் வேண்டும். இந்தப் பொருத்தத்தில்தான், சீரும் சிறப்பும் செல்வாக்கும் செம்மையும் பெற்றிலங்கும் தமிழ்ப் பண்பாட்டின் தலை எழுத்தே அடங்கியிருக்கிற தெனவும் சொல்லலாம், கொள்ளலாம்!- தமிழ்ப் பண் பாட்டை, அதாவது தமிழர் பண்பாட்டைப் பேணிக்காப் பதிலும் காத்துப் பராமரிப்பதிலும் சமுதாயத்திற்கு எந்த அளவு வீதத்திலே உறவும் உரிமையும் கடமையும் கட்டுப் பாடும் இருக்கின்றனவோ அதே வீத அளவிலான உறவும் உரிமையும் கடமையும் கட்டுப்பாடும் தமிழ்ப் பண் பாட்டை-தமிழர் நலப் பண்பாட்டைப் பிரதிபலித்துக் காட்டுகிற தமிழ்ப் படைப்பின் இலக்கியத்திற்கும் உண்டு என்பது நியாயமான, நேர்மையான, நீதியான ஏன் சத்தியமான உண்மையாகவும், ஆகிறது அல்லவா ?

ஆனால், தமிழுக்கும் அமுதென்று பேர்’ எனப் பாவேந்தரால் புகழ்ப் பாமாலை சூட்டப் பெற்ற அமுதத் தமிழ் மொழியின் படைப்பிலக்கியப் பூங்காவின் இன்றைய நடப்பு என்ன ? நிலை என்ன ? நிர்ணயம்தான் என்ன ?

ஆராயப்பட வேண்டிய கேள்விக்கு உரித்தான, உரிய தான பதிலை ஆராயப் புகுந்தால், அழகு மணம் வீசிய படைப்பிலக்கியப் பூங்காவனத்தில் இன்று பரவிவிட்ட நச்சு நோய்க் காற்றின் ஆரோக்கியமற்ற நெடியின் விளை வாக, நம் தமிழ் மூச்சு நின்றுவிடுவது போன்றதோர் அபாயமான உணர்வுதான் தார்மீக அடிப்படையில் மிஞ்சு கிறது: எஞ்சுகிறது.

ஆகவேதான் இத்தகைய துரதிர்ஷ்டவசமான அவல நிலைக்கு, நெருக்கடி நிலைக்கு நமது தமிழ்ப்பண்பாட்டை யும் தமிழ்ப் பண்பாடு மேவிய தமிழ்ப் படைப்பிலக்கியத் தையும் ஆளாக்கி ஆட்படுத்திக் குற்றுயிரும் குலை உயிரு மாகத் துடிதுடிக்கச் செய்துவிட்ட சமுதாயப் பொது விரோதிகளான எழுத்துச் சமுதாயப் புல்லுருவிகளைச் சமுதாயத்தின் பொது வீதிகளிலே, சமுதாய மக்களின் முன்னிலையில் குற்றக் கூண்டுகளில் ஏற்றி நீதி