பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

விசாரணை செய்து, இளைய பாரதத்தினருக்குப் புது ரத்தம் செலுத்திப் புது மலர்ச்சியை உண்டு பண்ணும் வகையில் தமிழ்ப் படைப்பிலக்கியத்தை நெறி முறை. யோடும் சத்தியத் தருமத்தோடும் கட்டிக் காத்திட வேண்டிய சமுதாயப் பிரக்கினையோடு கூடிய சமுதாய நல்லெண்ணப் பொறுப்பும் எனக்கு ஏற்படலாயிற்று; எனக்கு மட்டுந்தான் ஏற்படலாயிற்று. அக்கறையோடு சிந்திக்கத் தொடங்கினேன். என் சிந்தனைகளைச் சுதந்திரம், அன்று அஞ்சல் செய்தது!

நான் பொறுப்புடனும் அக்கறையுடனும் மேற் கொண்ட மேற் கண்ட சமூக நலப் பொதுப்பணி பலன் பெற்றது, பயன் சொன்னது!-இளைய பாரதச் சமுதாயம் விழிப்படைந்து வருகிறது என்கிற நடைமுறை உண்மை யில் என்னுடைய இலக்கியத் திறனாய்வு மனம் ஆறுத லடையவும் வழி பிறந்து விட்டது !

மீண்டும் எண்ணிப் பார்க்கிறேன்:

எண்ணங்கள் மீண்டும் சிலிர்க்கின்றன. சிலிர்ப்படை கின்றன; சில்லிட்டுப் போகின்றன!...

மஞ்சளின் மகிமைக்கும் ஒரு மானப் பிரச்னை !

நடைமுறை வாழ்க்கையில், மஞ்சளுக்கும் மகிமை உண்டு; மஞ்சள் நிறத்துக்கும் மகிமை உண்டுதான்!ஆனால், இலக்கியத்தில் மஞ்சள் சேர்ந்து விட்டால், அது மஞ்சள் இலக்கியம் ஆகிவிடும்; அதற்கும் சிவப்பு விளக்கிற் கும் ஒரே அந்தஸ்து தானே கிட்டும்? ஆகவேதான், வாழ்க்கை நடைமுறைக்கு அபாய அறிவிப்பாக விளங்கு கிற மஞ்சள் இலக்கியத்துக்குச் சட்டத்தின் விதியும் அபாய அறிவிப்பாகஅமைகிறது, அல்லவா? -