பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 191



‘செக்ஸ் எனப்படுகின்ற தூய்மையான் இனிக்கவர்ச்சி அல்லது, பால் உணர்வுக்கு ஆசாபாசங்கள் விதிமுறை யாக அமையும். ஆனால், ஆபாசங்கள் விதி விலக்காகவே அமைய வேண்டும்.

விலக்கு விதியாக அமையத் தக்க ஆபாசங்களுக்கு வாசனைத் திரவியங்களைப் பூசிவிட்டாலும் கூட, அவை: நாற்றமெடுக்கக் கூடிய அருவருப்பூட்டும் கச்சடா’ களஞ்சியமான மஞ்சள் இலக்கியத்துக்கு உலகத்தின் எந்த நாட்டிலுமே சட்டபூர்வமாகவோ அல்லது, சமூக ரீதியாக வோ அல்லது, அரசியல், அடிப்படையிலோ வரவேற்புக் கிடையாது; கிடையவே கிடையாது!

அப்படிப்பட்ட நச்சு இலக்கியத்துக்கு பார்ர் உஷார்’ போடும் அளவுக்கு, தடையை மீறி, விதியையும் மீறித் தோள்கொடுத்து வருகிற நாசக்காரக் கும்பலொன்று நமது அருமைத் தமிழகத்திலே நாளும், பொழுதும் வளர்ந்து வருகிறது; வள்ர்க்கப்பட்டு வருகிறதென்றும் சொல்லலாம். இவ்வாறாக, வளர்ந்து வருகிற அல்லது. வள்ர்க்கப்பட்டு வருகிற இந்தச் சமூகத் துரோகக் கும்பவில் தற்போது அல்லி தர்பார் மாத்திரம் நடக்க வில்லை; அர்ஜுனன் தர்பாரும் நடக்கிறது; இந்தச் சமுதாய விரோதச் சக்திக்கு இரண்டு நாயகர்கள் உண்டு; இரண்டு நாயகிகளும் இருக்கின்றனர். இவர்களின் சர்வாதிகாரச் சாம்ராஜ்யத்திலே முரண்பாடுதான் பொது விதி,

நீங்கள் சந்தித்த அந்த நாலு பேர்களையும் இப்போது திரும்பவும் திரும்பிப் பர்ர்க்கிறீர்களா ?

1. சுஜாதா.

2. புஷ்பா தங்க(த்)துரை.