பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை


3. இந்துமதி.

4. சிவசங்கரி.

இப்போது, கதையொன்று சொல்வேன், கேட் பீர்களா ?

விசித்திரமான கதையாக்கும் !-ஒரு சிங்கம் ஒரு முயலாக ஆகிறதென்றால்,வேடிக்கை இல்லையா ? வினோ தம் இல்லையா ?

வேடிக்கையையும் வினோதத்தையும் செய்து காட்டு வது யார், தெரிகிறதா?- சிவசங்கரி:- ஒரு காலத்தில் என் நல்லெண்ணத்துக்குப் பாத்திரமாக விளங்கிய என் எழுத்துச் சகோதரியான சிவசங்கரி !

சிவசங்கரி தயாரித்து எழுதிய கதைதான்: ஒரு சிங்கம் முயலாகிறது !”

சிங்கத்தை, அசிங்கத்தையல்ல, சிங்கத்தை எண்ணு கிறேன்; முயலும் என் எண்ணங்களில் குதித்துக் கலக்க முயலுகிறது! இப்படிப்பட்ட சோதனையான கட்டத்தில், நான் எழுத்துச் சமுதாயத்தின் தீய சக்திகளைச் சாடி, அவர்களுடைய செக்ஸ் கண்களைத் திறக்க முயன்று பாடின புதுக் கவிதையும் இந்தக் கூட்டுக் கும்மாளத்தில் கூட்டுச் சேர்கிறது. கல்கி ராஜேந்திரன் பாராட்டி வெளி யிட்ட பாடல் அது.

நீங்களும் கேளுங்கள்:

“அந்தரங்கப் பாலுணர்வின் அர்த்த ஜாம முரண்களைத் தேடிச் சரணடைந்து, மேலைக் காற்று வாங்கி, மேல் மூச்சும் வாங்கி, மோகக் காம வெறியுடனே முரண்பாட்டின் உச்சி நின்று, கூடுவிட்டுக் கூடு பாய்ந்து,