பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 195

அருமையான, தமிழ்ப் பண்பாடு மேவிய தமிழ் நாவலா சிரியை என்பதையும் நாம் நெஞ்சில் இருத்திக் கொள்வது நலம்.

லக்:மியின் மேற்கண்ட நவீனத்திலே மணியன் ‘லக்ஷ்மி'யை இவ்வாறாக நமக்குப் பழக்கப்படுத்துகிறார்: ‘அமரர் வாசன் அவர்கள் கண்டுபிடித்து அறிமுகப் படுத்திய மருத்துவக் கல்லூரி மாணவி லக்மி, மருந்துகள் கசக்கும்; ஆனால், லக்ஷமியின் நாவல்களில் சோகம்கூட சுவையாக இனிக்கும் !”

“அவள் தாயாகிறாள் !” கதையை நாம் இப்போது எண்ணிப் பார்க்க வேண்டும்.

மனோகர் தம்பிரானின் ஆசை மனைவி திலகா. அவளுக்குக் குழந்தை என்றால் ஆசை; பிராமணன். ஆனால், அவளுக்குக் குழந்தைப் பாக்கியம் கிட்டவில்லை. இந்த துர்ப்பாக்கியத் திற்குக் காரணம், உண்மையில் அவள் அல்ல தான்; அவளுடைய அன்புக் கணவனின் உடற் கோளாறுதான், குழந்தைப் புேற்றுக்குக் குறுக்கே விதியாகச் சிரிக்கிறது! இவ்வுண்மை நிலைமையை அறிந்த மனோகர், அதாவது, திலகாவின் அன்பு சால் கணவனான மனோகர், தன் அருமையான மனைவியிடம் சோதனையான யோசனை ஒன்றை வெளியிடுகிறான். (கதை, தென் ஆப் பிரிக்காவில் நடக்கிறது) ‘திலகா, டாக்டர் மில்லர் இன்னொரு யோசனையைச் சொன் னாரே, அதைப் பத்தியும் நீ எங்கிட்டே மறைச்சே!... எங்க அண்ணன் ஒப்புதல் கொடுத்தா, அவர் உதவியோடு செயற்கைக் கருத் தரிப்பு முறையைப் பரீட்சை செய்து பார்க் கலாம்னு சொன்னாரே, டாக்டர்?’ என்கிறான் மனோகர். -

உேங்களுக்கு இதைப் பேசக் கூட அசிங்கமா இல்லே? என்னதான் வெள்ளைக்காரன் தடு