பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

விலே நாம் வந்து வாழ்ந்துட்டாலும், அவர் களாட்டம் உடுத்துக் கொண்டு, இங்கிலீஷ் பேசிக் கொண்டிருந்தாலும், நாம வெள்ளைக் காரர்கள் ஆகி விடமாட்டோமே! அவர்களுக்குச் சரின்னு படுற சில கொள்கைகள் நம்ம மனசுக்கு இயற்கைக்கு மீறின, இயற்கைக்கு ஒவ்வாத முரணாக, தப்பாகவே தோணும். பல காலமாய் நம்ப ரத்தத்திலேயே ஊறிப் போன சில பழக்க வழக்கங்கள், கொள்கைகளை எப்படிங்க நாம. மாற்றிக்க முடியும்?'-திலகா.

“உனக்குச் செயற்கைக் கருத்தரிப்பு முறை. யிலே நம்பிக்கை இல்லையா ? வெளியிலே யாருக் கும் தெரியாமல் இதை டாக்டர் ரகசியமாக முடிச்சுக் கொடுப்பார்!’’-மனோகர்.

மறுபடி திலகா அசல் தமிழச்சியாகிச் சீறு கிறாள்; “மறுபடியும் அதைப் பேசாதீங்க. எனக்கு ரொம்ப அருவருப்பாய் இருக்குது. இன்னிக்கு லிப்ஃடிலே டாக்டரைப் பார்க்கப் போனபோது, பக்கத்திலே நின்ற வெள்ளைக் காரன் கழுத்திலேருந்து வழிஞ்ச வேர்வைத் துளி ஒண்ணு என்னோட கையிலே விழுந்திடுச்சு. அந்த அசிங்கத்தையே என்னாலே தாள முடி யலை. வீட்டுக்கு வத்ததும், கையை டெட் உால் போட்டுக் தேய்ச்சு தேய்ச்சுக் கழுவினேன். அப்படி இருக்கிறச்சே, செயற்கை முறைப்படி, இன்னொருத்தனுடைய... சே உங்க அண்ணன் எனக்கும் அண்ணன் உறவுபோல... அதுக்கப் புறம் அவர் முகத்திலே நான் எப்படி முழிப் பேன்?... இத்தனை அவமானமும் அசிங்கமும் பட்டு, ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டியது நமக்கு அவசியந்தானா?’ என்று பூ நாகமாகச் சீறிப் புலியாகப் பாய்ந்து, ஜாதிப் பூவாக உயர்கிறாள் திலகா! - .