பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 197

திருமதி லக்ஷ்மி அவர்கள் நேர்மைத் திறம் கொண்டு சமூகப் பிரக்கினையுடன் படைத்து உருவாக்கிய திலகா 1

ஆனால், இந்துமதியின் கதையை அதாவது, இதே குழந்தை அடிப்படையில் இந்துமதி சேகரித்து எழுதிய ‘மணல் வீடுகன் கதையை நீங்கள் அறிவீர்களே ?புவன ...க்ருபா: ஜோடித் தம்பதி. ஜோடிக்குப் பொருள் சொல்ல. இங்கேயும் பிள்ளை இல்லை. ஆனாலும், இவர் களுக்குக் குழந்தை வேண்டும்.க்ருபா மூலம் குழந்தையைப் பெற்றுக் கொடுத்து விட்டுத் திரும்பிக் கூடப் பார்க்காமல் சினிமாவில் வருகிற மேனகை மாதிரி மறைந்து விடக் கூடிய பெண் ஒருத்தியும் இப்போது அவர்களுக்குத் தேவைப்பட்டது ; கிடைத்தாள் ஸ்ஸி என்னும்படியான தாசி - ஆமாம், தாசியேதான் ; இல்லையென்றால், அவள்-ஸளி, மனசிலே க்ருபாவுக்கு இடம் கொடுத்த பின், வெறும் உடம்பு என்ன பெரிய விஷயம், சாந்தி: என்பாளா? தமிழகத்துப் பண்பாட்டின் மரபார்ந்த நெறிமுறைகளினின்றும் முரண்படுவதுதான் வாழ்க்கை என்பதாக நியாயப்படுத்திப் பேசத் துணிந்த இந்துமதி யின் சளி பாவம், பரிதாபத்துக்குரியவள் அடி நாளிலே பண்புச் சிறகடித்துப் பறக்க முயன்று. உயரப் பறக்கவும் முயன்று கொண்டிருந்த அழகான வானம்பாடி, ஊர்க் குருவியாகி, உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந் தாக ஆகிவிடமுடியாது என்கிற நல்ல பாடத்தை இந்தத் தமிழ்ச்சாதியிடமிருந்து கற்றுக் கொள்ள பொன்னான . சந்தர்ப்பம் கிட்டியும் கூட, அந்தப் பொன்னான சந்தர்ப் பத்தைப் பண்போடு பயன்படுத்திக் கொள்ளாமல் அந்த அழகான வானம்பாடி தட்டித் தடுமாறி வருகிறது :இந்துமதி திருந்தினாலும் சரி, திருந்தாவிட்டாலும் சரி ! தமிழ்ச் சமூகத்தின் இளந்தலைமுறை, இப்போது பொறுப்புடன் விழிப்புப் பெற்று விட்டது : -

என் மதிப்பில் உயர்ந்த கலைஞர் மு. கருணாநிதி எழுதிய வெள்ளிக்கிழமை என்னும் நவீனம் குறித்த

ஜெ-13