பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

லாவண்யா சமர்த்தாகக் கணவன் ராமிடம் பேசுவதைக் கேளுங்கள் : ...மேல் நாட்டிலே ரொம்ப சகஜமாய் நடக்கிற இந்த முறைக்கு ஏனோ நம்ம நாட்டிலே வரவேற்பே இல்லே. இதிலே என்ன த ப் பு ராம்... சோரம் போறோமா ? இல்லை, கெட்டுப் போறோமா ? ஒண்ணுமில்லே. உயிரைக் காப்பாத்த ரத்தம் ஏத்திக்கிற மாதிரி, நொந்த மனசைக் காப்பாத்த ஒரு தாம்பத்தியம் உடைஞ்சி போயிடாமல் காப்பாத்த, ஒ ரு இன்செக்ஷன் மூலம் குழந்தையை உண்டு பண்ணுகிற சக்தியை ஏத்துக்கிறோம் ஜஸ்ட் ஒன் இஞ்செக்ஷன் :அவ்வளவுதான் ! உங்களைப் பொறுத்தவரைக் கும் இதிலே. நீங்க வேறு எந்தப் பொறுப்பையும் ஏத்துக்க வேண்டாம். ஒரு நாள் அஞ்சி நிமிஷம் டாக்டரைப் பார்த்துட்டு வந்துடறதோட உங்க வேலை முடிஞ்சுடும். அந்தப் பொண்ணு யாரு, எப்படிப்பட்டவ, கறுப்பா - சிகப்பாங்கிற விவரங்கள் உங்களுக்குத் தெரிய வேண்டிய அவ சியம் இல்லே. பத்து மாசம் கழிச்சு, நம்ம குழந்தை ஒண்ணை உங்க கண்ணிலே நான் காட்டறேன். தட் இஸ் ஆல் ! - உங்களுக்கு வேதனையோ, கஷ்டமோ, சங்கடமோ இல்லாமப் பார்த்துக்கறது என்பொறுப்பு. நான் இந்தனை வருஷங்கள்லே உங்ககிட்ட எதுக்குல்ே இப்படிக் கெஞ்சினதில்லே, ராம் ... இப்ப கெஞ்சறேன். என் இந்த ஆசையை மட்டும் நிறைவேற்றித் தந்திருங்கோ !...ப்ளீஸ்... நீங்க ப்ராமிஸ் பண்ணி இருக்கேள்... ஞாபகம் இருக் கட்டும், ராம் !” - -

தமிழ்ப் பெண்ண்ாம் லாவண்யா மூலம் தமிழ்ப் பெண்ணாம் தங்கை சிவசங்கரி எப்படிப் பேசுகிறாள், கேட்டீர்களா ?