பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

‘இன்றைய எழுத்தாளர்களில் சிலர் ஆபாசத்தையும் பெண்ணின் கவர்ச்சியையும் குறிக்கோளாகக் கொண்டே கதைகள் எழுதுகிறார்கள். அதுதான் வ யி ற் று. ப் பிழைப்புக்குக் குறுக்குவழி என்கிற நிலைமையும் உருவாகி விட்டது. இதனால் எழுத்துத் துறையிலே நச்சிலக் கியங்கள் தாம் மலிந்தனவே தவிர, நல்ல இலக்கியம் வளர வில்லை. எழுத்தை வைத்துத்தான் பிழைக்க வேண்டு மென்ற நிலை இல்லாத, நல்ல வருவாய் கொண்ட புகழ் பெற்ற கதை ஆசிரியர்களும் ஆசிரியைகளும் தங்கள் தரத்திலிருந்து இறங்கி, எழுத்து விபச்சாரம் புரிவது வருந்தத் தக்கது “ .

‘சாகித்ய அகாதெமி’ பரிசு பெற்ற சமூகநலப் புரட்சி எழுத்தரசர் பி. எஸ். ராமையா அவர்கட்கு நடந்த பாராட்டு விழாவில் தலைமையேற்று உரையாற்றிய பாரதத்தின் அந்நாள் நிதி அமைச்சர் திரு. சி. சுப்பிர மணியம் அவர்களும் இவ்வாறு வருந்தினார் :

“இலக்கியம், இலக்கியமாக இல்லாமல் வியாபாரப் படுத்தப்படுகிறது . இதை நாம் ஒரு நல்ல முடிவுக்குக் கொண்டு வரவேண்டும், தங்கள் தன்மானம் காப்பாற்றப் பட, நமது பெண்கள் போராட வேண்டும் !’

- தாய் : ஜூன் 1983 :

முடிவாகக் கூறுவேன் :

நியாயங்களை நி யாய ப் ப டு த் த வேண்டியது கிடையாது. -

ஏனென்றால், நியாயங்கள் தாம் வாழ்க்கையாகப் பரிமளிக்க வேண்டும் -இதுவே, தமிழ்ப் பண்பாடு, பண் பாடுகின்ற வேத விதி ! .