பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை



வரலாற்றில் பெருமை கண்ட அருமை மிகு தமிழ்ச் சமுதாயத்தின் பெருமை மிக்க தமிழ்ப் பண்பாட்டைச் இசாதித்த தமிழ் எழுத்துத் துரோகிகளை-எதிரிகளைத் தமிழ்ச் சமுதாயத்தின் குற்றவாளிக் கூண்டிலேயே நிறுத்தி வைத்து, சோதனை செய்தேன்.

விசாரணை செய்தேன். சத்தியம் வென்றது. தருமம் வாகை சூடியது.

உடன் பிறந்தே கொல்லும் வியாதியாகப் பிடித்த தீய சக்திகளை இப்போது தமிழ்ச் சாதி புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டது , சமூகத்தின் நாசகாரக் கும்பலாக விளங்கி இன்னமும் நாறிக் கொண்டிருக்கிற எழுத்துத் துரோகிகளையும் அத்துரோகிகளுக்குப் பால் வார்க்கும், ஊகம், பாலுணர்வை வார்க்கும் பத்திரிகையாளர் களையும் இளைய பாரதத்தினர் இனம் காணத்தொடங்கி நாட்கள் பல ஆகிவிடவில்லையா ? . -

திறனாய்வு வகையில் முதல் நூல், கல்கி முதல் அகிலன் வரை’.

அடுத்தது.இது ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை’

இதையடுத்துவரும் “சாண்டில்யன் முதல் வாஸந்தி வரை என்ற நூலில், உண்மையான தமிழ்ப் படைப் பிலக்கியப் பணியாளர்கள் இன்னும் சிலரையும் நாம் சந்திப்போம் : o ~

மீண்டும் சொல்வேன் !

o தமிழ்ப் படைப்பு இலக்கியம் மறுபடி புத்துயிர் பெறத் தொடங்கிவிட்டது: . . . . . . . . . . . . . . . * * * . . .