பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 205

நம்பிக்கையில், ஒர் அக்கினிப் பரிட்சையாக, அருமை மிகு கங்காவைப் படைத்தார் - கங்கா பேர் எடுத்து விட்டாள் ; பேர் சொல்லி விட்டாள் !

விளைவு :

படைப்பின் இலக்கியத் துறையிலும் அனுமதிக்கப்ப்ட வேண்டிய ஜனநாயக தருமத்தையும் சூது கவ்வ நேர்ந்தது!- நமது தமிழ்ச் சமூகத்தைச் சார்ந்த தமிழ்க் கதாசிரியர்கள் பலரும் தமிழ்க் கதாசிரியைகள் சிலரும் ஜெயகாந்தனைத் தழுவ நினைத்து, கங்காவைத் தழுவினார்கள்.

பலன் :

பிள்ளையார் பிடிக்கக் குரங்காக முடிந்தது கதை !

கங்காவை இனம் காண முடியாமல் அவர்கள் தோற்றுப் போனார்கள் - அத்தோல்வியில் விளைந்தது தான், மஞ்சள் இலக்கியம். - -

எழுத்துச் சமூகத்தின் புல்லுருவிகளாக உருமாறி, உருக்காட்டுப் படலம் நடத்தத் தொடங்கியது நாசகாரக் கும்பல் ஒன்று ! -

சிவப்புக் கதைகளும் மஞ்சள் கதைகளும் வெளிப் படுத்தப்பட்டு, நல்ல மக்களின் வெள்ளை உள்ளங்கள் பாழ்படவும் சீரழியவும் தொடங்கின.

ஆனால், சமூக நல வாழ்வுக்கு அச்சுறுத்தலாக அமைந்த எழுத்துச் சமுதாயப் புல்லுருவிகளின் புகழ் குறுக்கு வழியில் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது!...