பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம் Δ 21




‘உன் பேர் கங்காவா ?”

அவனுக்கும் ஞாபகச் சக்தி இருக்கிறது !

அவன் பெருமூச்சு விட்டது, பாம்பு சீறின பாவனையில் அவள் காதை ஆமாம், காதைத்தான் பொசுக்கியது.

வந்தபின் காக்கும் கெட்டித்தனத்தோடு, “உங்களுக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்கா? இப்போ நான் யாருன்னு தெரியறதா ?” என்பதாகப் பேச்சை நீட்டினாள் கங்கா.

“கங்கா !”

பிரபு இப்போது தன் பங்கிலும், தன் பங்குக்காகவும் பேசத் தலைப்படுகிறான் : “...எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்குது ; அன்னிக்கு அப்புறம் உன்னைப்பத்தி நான் நினைச்சேன்னான்னு எனக்கு நினைப்பு இல்லை , நினைச்சு இருக்கிறேன். ஆனாக்க, பன்னெண்டு வருஷத்துக்கு அப்பாலே உன்கிட்டேயிருந்து இப்படி ஒரு ஃபோன் கால் வரும்னு நான் நினைக்கவே இல்லை. நிசமாகவே இது நீதானா ? ஒ எவ்வளவு சின்னப் பெண்ணா இருந்தே? உன்னைப் பத்தித் தெரிஞ்சுக்கணும்னு எனக்கு ஆசையா இருக்குது !...”

கங்காவுக்கு இப்போது, இப்போது தான் தொண்டைக் குழியில் என்னவோ துடிக்கிறது ; நெஞ்செல்லாம் வலிக்கிறது!...நான் எதுக்கு இப்போ அழப்போறேனோ, தெரியலை ; ‘பாவி’ங்கற ஒரு வார்த்தை பாதியிலே தொண்டையிலே அடைச்சிண்டு நிக்கறது. அவனை வையறதோ, சபிக்கிறதோ நியாயமில்லேன்னு என் மனசுக்குப் புரியறது !...”

பாவி !

அவள் அவனை உடனடியாகவே சந்தித்தாகவேண்டும்

எந்த இடத்திலே சந்திக்கலாம் ?ஜெ.-2