பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 Δ ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை




நெருக்கடியான இந்நேரத்தில், யாரோ குரல் கொடுக் கிறார்கள் ; பின்னணிக்குரல் :

ஒ:- ஜெயகாந்தன் !

‘காலங்கள் மாறும் போது, மனிதர்களும் மாறித்தான் ஆகவேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் மாற்றமே காண வைக்கிறது. பல மாற்றங்கள், சமுதாய வாழ்வில் புதுமையானவையாக இருந்தாலும், தனி மனிதர்கள் வாழ்வில் காலங்கடந்த மாற்றங்களாகவே, நிராசைகளின் நிலைத்த சித்திரங்களாகவே உயிரிழந்து வந்து நிற்கின்றன ! அப்படிப்பட்ட ஒரு தனி மனிதப் பிரதிநிதிதான் கங்கா - அவளது இறந்த கால - நிகழ் கால - எதிர்காலங்களின் மாற்றங்கள் முன்னும் பின்னும் குழம்பி, காலப் பிரக்ஞையை மறுத்த நிகழ்ச்சிகளின், எண்ணங்களின், ஏக்கங்களின் முறையாகத் தொகுக்கப்படாத வார்ப்பே கங்கா ! - காலத்தின் அலைகளால் எற்றுண்ட, மோதி மூழ்கிய, போக்கில் மிதந்த, எதிர்த்து ஒய்ந்த ஒர் ஆத்மாவின் கதை இது!...”

கங்கா குற்றவாளி !

அவள் செய்த குற்றங்கள் :

1 காலப் பிரக்ஞையை மறுத்தாள்

2 சமூகப் பிரக்ஞையை மறந்தாள் ;

3. கற்பு நிலையைத் துறந்தாள்.

4 உயிரை மறுக்கவில்லை, மறக்கவில்லை, துறக்க வில்லை! - -

காலங்கள் மாறலாம் ! ஆனால், முரண்படலாமா ?

காலங்கள் முரண்பட நேர்த்தால், தருமம் அழிந்து விடாதா, என்ன? -