பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 Δ ஜெயகாந்தன முதல் சிவசங்கரி வரை


வீசியவர் - “கங்காவுக்கு ஒரு ஸ்திரமான புத்தி கெடையாது. அவளைச் சொல்லிக் குத்தமில்லே. இந்தக்காலம் அப்படி இருக்கு. எப்பேர்பட்டவா மனசையும் சபலத்துக்கு உள்ளாக்கற காலம் இது. பாரேன் (கனகம்); இதை ('ஒடின காரில், ஓடாமல் நடைபெற்ற கற்புக் கொள்ளைச் சருக்கம் காண்க :) ஒரு நியாயம்னு எவனோ (சாட்சாத் ஆர். கே.வி :) கதை எழுதி இருக்கான். அதைப் பத்திரிகையிலே போட்டிருக்கான். அதையும் லட்சம் பேர் படிக்கறாளே ? சின்னக் குழந்தையானா, அதைப் படிக்காதே, இதைப்படிக்காதே !’ன்னு சொல்லலாம். அவாவா சபலத்துக்கு ஏற்றமாதிரிதான் ரசனை வரும். இவ்வளவு எதுக்கு ? இத்தனையும் தெரிஞ்ச உன்னையே இந்தக் கதை குழப்பி இருக்கே “ மாமாவின் வாய்க்கு உப்புத் தான் போடவேணும். நன்றியறிவுக்கு உப்பு ஒரு முன் மாதிரி இல்லையா ? ஆனால், ஒன்று: மாமா சாடியது சாட்சாத் ஆர்.கே.வி. அவர்களைத்தான் !...

ஜெயகாந்தன் என்றால் ?...

ஆமாம் - ஜெயகாந்தன் என்றால், ஜெயகாந்தன்தான் !.

தமிழ் இலக்கிய உலகத்தில் ஒரு தனி எழுத்தாளப் பிரதிநிதியாகத் திகழ்ந்த- திகழ்கிற- திகழக் கூடிய ஜெயகாந்தன் குறித்து ஒரு சமயம் நான் இவ்வாறு குறித்திருந்தேன் :

“மக்கள் இலக்கியத்தின் மரபு காத்து, மாண்பு காத்து, பண்பு காத்து, மரியாதையையும் காத்துத் தமிழ் இலக்கியத்துக்கு நேர்மையான சத்தியமான-தருமமான பணிபுரிந்து, தமிழ் இலக்கியத்துக்குப் புகழ் தேடித் தந்து, அதன் பயனாகவும் பலனாகவும் தங்களுக்கும் வரலாற்றுப் பெருமை பூண்ட தமிழ்ச் சமுதாயத்திற்கும் புகழைத். தேடித் தந்த பழந் தலைமுறையினரில் அறிஞர் வ.வே.சு. ஐயர், வேத நாயகம் பிள்ளைபோன்ற சிலரும்