பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 Δ ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை




ஜெயகாந்தனுடைய ந ல் ல தி ர் ஷ் ட ம், அவருக்குச் சந்தர்ப்பச் சூழ்நிலைகள் அனுசரணையாக வாய்த்தன நினைத்ததை எழுதக் கூடிய வாய்ப்பு வசதிகளும் கிடைக்கலாயின. இலக்கியத்தில் ஜனநாயக தர்மம் அனுமதிக்கப்படுவதில்லை என்கிற குறையும் அவர் வரை தீர்ந்தது; தீர்க்கப்பட்டது. பின், அவர் நாலு பேருக்கு மத்தியில் பேசப்பட்டார். விமரிசிக்கப்பட்டார். சமூகம் என்பது நாலுபேர் மட்டுமல்ல என்னும்படியான தத்துவத்தைப் புலனாய்வின் வழியில், ஒர் இலக்கியவாதியாக நின்று உணரவும் செய்தார். விமரிசனம் செய்யத் தொடங்கிய நாள் முதலாக ஒரு தலைப்பட்சமான பட்டியல் விமரிசகர் என்று பேரெடுத்த க. நா. சு. அவரையும் கடைசியில் சேர்த்து வைத்தார் ! எனவே தான், க. நா. சு., வின் ‘நளினி’ பற்றிய இலக்கிய ஆய்வையும் இங்கே திரும்பவும் நினைவு கூர்ந்துள்ளேன் ! அப்பால், அவர் தேடிக் கொண்ட புகழ் அவரைத் தேடி வந்த புகழ் அநியாமானதென்று சிலர் புலம்பினர், தவறாகவே புலம்பினர்.

“அன்பர் த. ஜெயகாந்தனின் சமகால எழுத்தாளர் வரிசையில் வாசவன், கோவி. மணிசேகரன், நா. பார்த்த சாரதி, விக்கிரமன், பி. வி. ஆர். ஜெகசிற்பியன், ராஜம் கிருஷ்ணன், அநுத்தமா, ‘பூவை’ போன்ற இன்னும் சிலரும் எழுத்துத் துறையில் துல்லியமாகவே பளிச்சிட்டனர் !- ஆனால், இவர்களுக்கெல்லாம் மறுக்கப்பட்டு வந்த எழுத்துச் சுதந்தரமும் ஜெயகாந்தனுக்கு எப்படியோ வழங்கப்பட்டது. இப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலியான ஜெயகாந்தனைத் தமிழ்ப் பண்பைப் பேணிப் பாதுகாக்கக் கடமைப்பட்ட குடும்பங்கள் பல நிராகரிக்க நேர்ந்த காலம் ஒன்று இருக்கத்தான் இருந்தது ! -

“ஆனால், இந்த ஜெயகாந்தன் எழுதத் துணியாத ஆபாசங்களையெல்லாம், அவரால் பாதிப்படைந்த படிதாண்டும் பத்தினி எழுத்தாளர் - எழுத்தாளிகள் ‘நாலு பேர்’ இலக்கியம் என்னும் பெயரில் ஆபாசங்களை