பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 49

ஓர் உண்மைச் சத்தியம் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற பலவீனமானதொரு வேடிக்கையான - விசித்திரமான - தனியான பல த் தோ டு தன்னுள்ளே சிரித்துக் கொள்கிறாளே கங்கா, இந்தக் கட்டத்தில்தான் கங்கா, கலப்படமில்லாத அசல் வீரத் தமிழச்சியாகவே பளிச்சிடுகிறாள் !

கங்கா என்னதான் ஆயிரம் தப்புகளைச் செய்திருந்தாலும், எல்லாத் தவறுகளுக்கும் தனது மனத்தைத் திறந்து காட்டிப் பிராயச்சித்தம் தேடிக் கொண்டு விட்டாளே என்று இரக்கப்பட்டு, ஆத்திரம் தீர்ந்து, அவள் மீது இந்தச் சமூகத்தின் சார்பிலேயே அனுதாபம் கொண்டு, நல்ல தீர்ப்பு வழங்கவும் என்னுடைய இலக்கிய மனம் தயாராகிறது !

இந்தத் தீர்ப்பிலே தான், கங்காவைப் போன்றே, கங்காவின் பரிபூரண உரிமையாளரான திரு.ஜெயகாந்தன் அவர்களும் சமுதாயத்தின் குற்றவாளிக் கூண்டுகனின்றும் விடுதலை பெறக் கூடிய நல்வாய்ப்பும் உருவாகிறது ; உருவாக்கப்படுகிறது !

கன்னி இருட்டிலே, கொட்டும் மழையிலே ஒரு பெரிய காரை நிறுத்தி, கன்னிப் பூஞ்சிட்டான கங்காவை- பிரபுவைக் கொண்டு அதில் ஏற வைத்து, அங்கே அவளது கன்னித் தன்மைக்குப் பங்கம் ஏற்படவும் தூண்டி, அவளை ஆட்டிப் படைத்து அலைக்கழித்து, கலை இலக்கியத் துறையில் செயற்கைத் தனிப்பாங்கு முறையைத் தொ ற் றி யு ம் பற்றியும் நின்ற கங்காவின் படைப்பாளி போதை தெளிந்து, போதம் பெற்றவராகி, ஒரு சமரச இணக்கத்துக்கு (Compromise) உடன்பட முன் வருவதற்கு மேலே விவரிக்கப்பட்ட “எஸ் ! ஐ லவ் யூ !” என்னும் நெகிழ்ச்சி மிக்க அந்தச் சுயதரிசன நிகழ்ச்சி மட்டுமேதான் உதவுகிறது என்பதையும் நான் மறந்துவிட மாட்டேன்.