பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை


இதற்கு முந்தியும் பிந்தியும், கங்காவின் பிரபுவும், பிரபுவின் கங்காவும் ஜே. கே.யின் ஆணைக்கு இணங்கி என்னென்னவோ பேசிக் கொள்ளுகின்றனர் !

அவை அவர்களது சொந்த விவகாரங்கள் ! - எக்கேடு கெட்டும் தொலையட்டும் !

உணர்ச்சி கூத்து

உணர்ச்சிகள் இதோ, திரும்பவும் கூத்து நடத்துகின்றன :

பன்னிரண்டு ஆண்டுகளைக் கழித்தபின், கங்காவும். பிரபுவும் மீண்டும் சந்தித்து, தங்களிடையே அந்யோந்யமான சிநேகத்தையும் நேசத்தையும் அன்பையும் பரஸ்பரம் தொடர்ந்து பரிமாறிக் கொள்ளுகிறார்கள்.

பிரபு வெகுளித்தனமான பெண்பித்தன். கங்காவிடம் தன்னைக் காட்டிக் கொள்கிறான் ; தன்னைக் காட்டிக் கொடுத்து விடுகிறான் : “...நான் ரொம்பச் சின்ன வயசிலயே கெட்டுப் போயிட்டவன் : ஆனாலும், நான் யாரையும் கெடுத்தவன் இல்லை... பத்மா எனக்குப் பெண்டாட்டிதான் ; அதுக்காக, நான் அவளைப் பலவந்தம் பண்ண முடியுமா ?”

பிரபு பேசுவதைக் கேட்கக் கேட்க, கங்காவிற்கு வருத்தமாக இருக்கிறதாம். அழகான நினைவுகள் அந்தரங்கத்தோடு அழகாகச் சதுரங்கம் ஆடுகின்றன : “...நான் விரும்பினாக்கூட, இன்னொரு தடவை கெட்டுப் போறதுக்கு எனக்குத் தலைவிதி இல்லே போல இருக்கு ! இவரைக் காதலிக்க முடியாத நானும், தன்னை விரும்பா தவளைப் பலவந்தப்படுத்தத் தெரியாத இவரும் இவ்வளவு நெருக்கமா இருக்கிறது எவ்வளவு செளகரியமான சங்கடம் இவ்வாறு நினைத்துக் கொள்ளும் கங்கா, அடுத்த சடுதியில் பிரபுவிடம் என்னால் யாரையுமே லவ் பண்ண முடியாது !’ என்று தெரியப்படுத்திய இதே. கங்கா, தானே, கடைசியில் “எஸ் ! ஐ லவ் ஹிம் !” என்று