பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 51

பிரபுவை நினைந்து, நினைந்து, உயிரும் உயிர்ப்பும் தத்தளித்துத் தட்டுத் தடுமாறித் தவித்துத் துடிக்கிறாள் ? நல்ல பெண் அம்மா நீ - முன்னுக்குப்பின் இப்படியா முரண்படுவாய் ?- ஜே. கே - மூச் !

இதோ, தொடர்கிறான் பிரபு .... அன்னிக்குக் காரிலே நடந்தது உன்னுடைய சம்மதத்தோட தான். அடுத்த நிமிஷமே, அது உனக்குப் பிடிக்கலேன்னு எனக்குத் தெரியும். ஆனா, அதுக்கு முன்னே, அதுக்கு முதல் நிமிஷம் நீ அதுக்குச் சம்மதிச்சேங்கறது (பிராமண நெடி- சகவாச தோஷம்) பொய் ஆகக் கூடாது ! நீ சம்மதிச்சுட்டதுக்கு உன்னுடைய அறியாமை காரணமா இருந்திருக்கலாம். நான் அப்பவே புரிஞ்சுக்கிட்டேன். ஆனா, அதுக்காக அதை ஒரு ‘ரேப்’னு (Rape) நினைக்காதே. அப்படி நீ நினைச்சதனாலேதான், அதை உங்க அம்மா கிட்டே போய்ச் சொன்னே. எல்லாக் கஷ்டத்துக்கும் அது தான் காரணம்... நான் மட்டும் வேற மாதிரி அயோக்கியனா இருந்தா, இதிலே இந்த உன் பலவீனத்திலே அட்வாண்டேஜ் எடுத்துக்கிட்டு உன்கிட்டே (சென்னப்பட்டண பாஷை கைவரக்காணாமே!) நான் இப்பவும் ‘மிஸ்பிஹேவ்’ பண்ணமாட்டேனா ?”

குமரி, அல்லது குமாரி கங்காவுக்கு நான் மனமுவந்தும் மனம் நொந்தும் வாசித்து அளித்த குற்ற மடலுக்கு, அதாவது காரில், அவளை அவன் இன்பம் துய்ப்பதற்கு அவளும் உடந்தையானாள் என்னும் படியான என் குற்றச்சாட்டுக்கு மற்றொரு குற்றவாளியான பிரபுவே சாட்சிக்கு வரட்டுமென்று தான் இத்தனை நாழி நான் காத்திருந்தேன். அன்னிக்குக் காரிலே நடந்தது உன்னுடைய சம்மததோடதான் !— Well done, Mr prabhu !...

பிரபு பேசி வாயை மூடவில்லை.

உடனேயே, கங்கா மீண்டும் கையும் களவுமாக அவளுடைய உள் மனத்திற்கு உள்ளேயே பிடிபட்டுவிடுகிறாள்: ‘அட, அசடே! (பிரபுவைத்தான்) இதை நான் உன்கிட்டே