பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 53



ஆனால், பிரபுவுக்கு ‘இனம்’ விளங்கவில்லை.

நயமாகவும் விநயமாகவும் விளக்குகிறாள் அவள்: “நேரிலே பார்த்தால் தெரியும் !”

அவர் : “ஓ !”

அந்த ‘ஒ’ ஒலியில் அவள் ஒரு மகாமகக் காலச் சரித்திரத்தை ஒளி வடிவில் காண்கிறாள்.

பிரபுவும் கங்காவும் மீண்டும் முன்போலவே ஒர் இனிமையான மாலைப் பொழுதில் சந்தித்துக் கொள்கிறார்கள். சந்திப்பு தொடர்கிறது. தொடர்புகிறது. வாய்ச்சொற்கள் மணக்கவும் செய்கின்றன. நாற்றமடிக்கவும், நாற்றமெடுக்கவும் தவறிவிடவில்லை தான். ஆனால், ஒன்று : அன்று நடந்த அந்த கற்பு விபத்துக்கு இன்று சம்பந்தம் கொண்ட அவர்கள் இருவருமே தங்களுக்குள் நீதிவிசாரணை நடத்திக் கொள்கிறார்கள். சம்பந்தப்பட்ட இவ்விருவருமே, சம்பந்தப்பட்ட அந்தக் கற்பின் விபத்துக்குப் பொறுப்பேற்க வேண்டிய குற்றவாளிகள் என்னும் சமூக விதியை மறந்து இன்றைக்கு ஒரு பேச்சு,நாளைக்கு ஒரு பேச்சு என்று என்னென்னவோ பேசுகிறார்கள் ; எப்படி எப்படியோ கதைக்கிறார்கள். அவனுடைய கை அவளது தோளில் பட்டுவிட்டதற்காக ‘சீ’ என்று ஆத்திரப் பட்டவள், பின்னர், ஏன் அப்படி ‘சீ’ என்றோமென்று வருந்தும்போது, இவ்விருவரிடையே பரஸ்பரம் நிலவும் பிரியமும் பரிவும் அன்பும் நேசமும் இங்கு வலுவடையவும் செய்கின்றன. உடலைத் தீண்டிய வன் உள்ளத்தையும் தீண்டி விட்டான் என்கிற ஞானோதயம் அவளுள் ஏற்படுகிறது !- என்றாலும், பிரபுவிடம் தன்னை இழந்த கங்காவும் கங்காவிடமும் தன்னை இழந்த பிரபுவும் வெவ்வேறு சந்தர்ப்பங்களிலே, நாம் ஒருவரையொருவர் காதலிக்க முடியாது !” என்று வசனம் பேசவும் மறக்கவில்லை. இதற்கிடையில், பத்மாவின் வாழ்க்கைப் பங்காளியாக பிரபுவின் துணை தனக்குஜெ—4