பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

அவசியமென்ற முடிவுக்கு வரவேண்டியவள் ஆகிறாள் கங்கா. பிரபுவின் ஆசை நாயகியாக அமையாவிட்டாலும், பிரபுவின் ஆசைநாயகி என்ற பெயரையாவது எடுக்கவேண்டுமென்ற வெறித்தனம் அவளுக்கு மேலிடுகிறது. ஆனால் அவனோ அவளுக்கு வேறிடத்தில் கலியாணம் செய்து வைக்க மனப்பூர்வமாக விரும்பு கிறான். அவள் மறுக்கிறாள்.

இப்படியாகத்தானே குழப்பங்களின் க்யூ நீள்கிறது ; சிறுக்கிறது.

உச்சநிலையில், படுக்கையின் பாகப்பிரிவினை !

இனிமேல், உச்சக்கட்டம்தான் மிச்சம் !

“எஸ். பிரபு ஹியர் !”

இப்போது பிரபுவிடம் தொலைபேசியில் ரியலி...வி லவ் ஈச் அதர் !” என்று புதியதான சேதி ஒன்றை அஞ்சல் செய்த கையோடும், அவள் தன் மனத்தோடு பேசுகிறாள் : இத்தனை வருஷமா இவருக்கும் எனக்கும் நடுவில் பொய்யாய் விழுந்த திரையெல்லாம் கிழிச்சுண்டு, வெறும் ஆம்பிளையும் பொம்பளையுமாச் சேர்ந்து கலந்துடணும்னு என் மனசு துடிக்கறதை இப்பத்தான், இந்த நிமிஷம்தான் நான் புரிஞ்சுக்கறேன். இஸ்திஸ் டு லேட் ? அதுக்குக் காலம் கடந்து போயிடுத்தா ? இவர் என்னைப் பார்க்கவே மாட்டாராமே ? கல்யாணப் பத்திரிகையோட வந்து நின்னாத்தான் பார்ப்பாராமே ?... இது என்ன பைத்தியக்காரத்தனம்?

தற்சமயம், தொலைபேசியில் பிரபுவிடம் மீண்டும் பேச ஆரம்பிக்கிறாள், பிரபுவின் கங்கா : “ஐ வில் மேரி யூ!... உங்களோட சொத்துக்காகவோ, அந்தஸ்துக்காகவோ இல்லை: அதெல்லாம் கிடையாதுன்னு எனக்குத்