பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 55

தெரியும். உங்களை ஒரு வெறும் ஆணாகத்தான் எனக்கு அறிமுகம். உங்களோட எனக்கு அப்படிமட்டும்தான் பழக்கம். வெறும் ஒரு ஆணின் உறவுக்காக நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கறேன். இனிமேலும், இப்படியே பழகிண்டு நம்மை நாமே ஏமாத்திக்க வேண்டாம் ! உங்ககிட்டே எனக்கு வெட்கம் இல்லே. என்னுடைய படுக்கை, நம்மால் பகிர்ந்து கொள்ளப்படுவதற்காகக் காத்திருக்கிறது. ஐ வில் ஷேர் மை பெட் வித் யூ”

“ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் !”

மறுபடி பிரவுடன் தொலைபேசியில் பேச்சைத் தொடர்வதும் கங்காவாகத்தானே இருக்க வேண்டும் ?

“நீங்க இல்லாமல் என்னாலே இருக்கவே முடியாது.”

“இருந்து பார், முடியும்.”

“உங்களாலே முடியுமா ?”

‘முடியனும்னு நினைக்கிறேன் ; முடியணும்.”

“நான் என்னையே இழந்துட்டேளே இது உங்களுக்குத் தெரியலையா ?”

‘இல்லை ; நீ உன்னை இழக்கலே, ஒரு தடவை நான் அப்படி நினைச்சது எவ்வளவு பெரிய தப்புன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். மறுபடியும் அப்படி தினைக்க, இன்னொரு பெரிய தப்பைச் செய்ய நான் தயாரா இல்லை!...இப்படி நான் சொல்றதுக்காக என்னை மன்னிச்சிடு, கங்கா!... இந்தக் கல்யாணத்தையோ, அல்லது. வேறு எந்தக் கல்யாணத்தையோ ஒப்புத்துக்கிட்டு இன்னொருவரின் மனைவியாகத்தான் நீ என்னைப் பார்க்க முடியும் ! நான் உன்னை இனிப் பார்க்காமல் இருந்தால்தான் அது