பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

சாத்தியமாகும். இந்த அறிவையும் பலத்தையும் எனக்குத் தந்த உனக்கு நன்றி கூறி மறுபடியும் இதை நான் உறுதி செய்கிறேன். எனக்கு நீ சொன்ன யோசனைகளையெல்லாம் நான் கேட்டிருக்கிறேன். என்னோட இந்த ஒரு வேண்டுகோளையாவது நீ கேட்கணும். இதைக் கேட்கக் கூடாதென்று நீ பிடிவாதம் பிடிச்சா நாம நிரந்தரமாகப் பிரிந்து போவதைத் தவிர வேறு வழி இல்லை ! கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும் ! மே ஐ ஸே குட் பை !...”

கங்காவிற்குத் தலை பற்றிக் கொண்டு எரிகிற மாதிரி கோபம் சீறுகிறது. தொலைபேசியின் செய்தி வாங்கிக் கருவியை மடாரென்று வைக்கிறாள். அப்புறம் தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறாள் கங்கா: ‘குட் பை !’

கங்கா ஒரு கம்பச் சித்திரம் !

இந்தத் தமிழச்சியைப் புதுமைப் பெண்ணென்று சொல்ல முடியாவிட்டாலும், புரட்சிப் பெண்ணென்று தாராளமாய்க் கூறலாம்; கூறவும் வேண்டும். அவளுடைய பெண்மை, அந்தக் காரில் ஏற்பட்ட கற்பின் விபத்திற்குப் பிறகு தான் விழித்துக் கொண்டது என்பதும் மறுக்க முடியாத உண்மையாக ஆகின்ற நிலையில், அவள் தனக்குத்தானே சுயப்பரிசோதனை நடத்திக் கொள்ளவும் அதன் பயனாகச் சுய தரிசனம் ஏற்படவும் வாய்ப்பு வசதி ஏற்பட்டதென்பதும் அங்கீகரிக்கப்பட்ட பாவமன்னிப்புக்கு வழிகோலி விடுகிறது. சிறு வயதில் செய்த பிழையைச் சிலுவையெனச் சுமக்கிறாள், பாவி !-

பாவம், பிரபுவின் அறிமுகமே, அதாவது பத்மாவின் கணவனான பிரபுவின் அறிமுகமே கங்காவிற்கு விதி ஆகிறது ; வினையும் ஆகிறது. பிரபுவை மறந்தவள்.ஒரு மகாமகத்திற்குப் பிறகு அவனை நினைக்கத் தொடங்கியதுமே, அவள் விளையாடத் தொடங்கிவிடுகிறாள்;களங்கம் கற்பித்து கொண்ட, களங்கம் கற்பிக்கப்பட்ட அவளுடைய