பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 57

புனிதக் கற்பு, அந்தரங்கப் புனிதம் கொண்டு, அவளையே புனிதமடையவும் துாண்டுவதால்தான், அவளது மனக்கிழியில் பிரபு உயிரோவியமாகவும நிலைத்துவிட நேருகிறது ! - விட்டகுறை - தொட்டகுறையின் பலன் இது தானோ ?

கங்கா சராசரியான மானுடப் பிறவிதான். ஆதலால்தான் பலவீனங்களை எண்பத்தைந்து சதவீத அளவிலும், பலத்தைப் பாக்கியுள்ள பதினைந்து சதமான அளவிலும் அவளால் கைக்கொள்ளவும் முடிகிறது . ஆனாலும், அவளது பலம்தான் இறுதியிலே அவளுக்குக் காப்பு ஆகிறது !.-இல்லையென்றால், தன் படுக்கையைப் பிரபுவோடு பகிர்ந்து கொள்ளத் துணிவாளா ?-இந்த வீரத் தனமான துணிச்சலில்தான், பாரதப் பெண் கங்கா வீரத் தமிழச்சியாகத் தலை நிமிர்ந்து நிற்கிறாள் மனம் ஒன்றிய, மனப் பூர்வமான, அந்த ஆத்மார்த்தமான நேசத்திலேதான்- பிரபு ஒருவனுக்கே காணிக்கை செலுத்தப்பட்ட- காவு கொடுக்கப்பட்ட அந்த ஆத்ம சமர்ப் பணத்திலேதான், அவள் ஒரு தனி மனிதப் பிரகிருதியாக அல்லாமல், ஒப்பற்றதொரு தனிமனிதப் பிரதிநிதியாகப் பொலியவும் பொலிவூட்டவும் வாய்க்கிறது : அருமைத் தமிழ்ச் சமுதாயத்தையும் களங்கப்படுத்தி அநீதி இழைத்த அவ்விருவரும் தங்கள் தவற்றை மறந்து, சமுதாயத்தின் பேரில் பழியைச் சுமத்தியதோடு, அவர்கள் தங்களையும் ஏமாற்றிக் கொண்டு முடிவில் இருவரும் திசைமாறிப் பிரியவும் நேர்கிறது :- இந்த சமூகக் குற்றவாளிகளுக்கு அந்தக் குட்பை தான் இரு தரப்பிலும் தண்டனையை வழங்குகிறது-இங்கே தான், கங்காவின் ஜெயகாந்தன் பிரபுவின் ஜெயகாந்தனாகவும் பளிச்சிடுகிறார். Superb Mr. Jayakanthan!’...

எழுத்தை ஆள்பவன், இரண்டாவது பிரம்மா மாத்திரம் அல்லன். அவன் சமுதாயத்தின் ஆன்மாவும் கூட- ஆகவே, இலக்கியப்படைப்பாளன், தனது குறிக்