பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

கோள். தனது ஆசாபாசங்களைக் கடந்த வகையில் இயங்கும் வண்ணம், தன்னையும் தன் இலட்சியத்தையும் கட்டிக் காத்திட வேண்டும் !

ஆனால்,

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ ஜெயகாந்தனோ, இவ்விதிமுறையில் தோற்றுப் போய் விடுகிறார்.--ஆகவே தான், அவருடைய கங்காவும், கங்காவின் பிரபுவும்கூட அவர்களது வாழ்க்கை விளையாட்டுக்களில் தோற்று விடுகிறார்கள். இந்த லட்சணத்தில், சமூகத்தின் ஆன்மாவெனப் பொலிந்து பொறுப்பேற்கக் கடப்பாடு கொண்ட ஜெயகாந்தன், இந்தச் சமூகத்திற்கென்று தனிக்கடமை உணர்வுடன் என்ன செய்தியை, எப்படிச் சொல்லுவார் ? -பாவம் ! தவிரவும், இந்த ஜே. கே. இந்தத் தமிழ்ச் சமுதாயத்தின் போராட்ட வீரரா, என்ன ?...

O தொடரும் வாழ்க்கையின் நிர்வாண உண்மைகளாகவே தொடரும் கதை தொடர வேண்டும் !

பொய் இல்லை !

OO அதோ, கங்கா விஸ்கியைச் சரண் அடைந்து கிடக்கிறாள். அவள் வரை, விஸ்கி வேறு, பிரபு வேறா?

சரி, கங்கை எங்கே போகிறாள் ?-அது அவள் சொந்த விஷயம். -

OOO இறுதியாக, ஒரு சேதி :

லட்சுமியையும் ஸ்ரீகாந்தையும் நான் என்றென்றும் மறவேன் !...

oooo சில நேரங்களில், சில மனிதர்கள் ஜெயகாந்தன் சாகித்ய அகாடமி பரிசினைப் பெற்றவர் ஆயிற்றே?-இலக்கிய அபிமானம் கொண்டு வாழ்த்தத்தான் வேண்டும் !

O O O