பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




2. பாலும் பாவையும்

விந்தன் :

பார்வை : திரு விந்தன் அவர்கள் :

உங்களுடைய முதல் நவீனம் ‘பாலும் பாவையும்!"—அதைப் படித்து முடித்த சகோதரி சரளா உங்கள் முன்னே முகம் காட்டத் துணிவு கொள்ளாவிட்டாலும், அகம் காட்டி, அதில் ‘புறத்தை’யும் காட்டி உங்களுக்குக் கடிதம் எழுதத் துணிந்திருக்கிறாள். அந்தச் சகோதரியின் துணிச்சலை எந்த அப்பாவியும் பாராட்டாமல் இருக்க மாட்டான். சரளாவின் திருமுகம் கிடைக்கப்பெற்ற நீங்கள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறீர்கள். மரபை ஒட்டிய பண்பாடு. நன்றியும் கூறியிருக்கிறீர்கள். உங்களுடைய நாவலை மனத்திண்மை மாறாமல், பெண் ஒருத்தி படிப்பதென்பதோ, படித்த பிறகு உங்களுக்கு தன் கருத்தை வெளியிடுவதென்பதோ, லேசுப்பட்ட காரியமா, என்ன ? ஒரு முறை என்ன, ஒராயிரம் தடவை வேண்டுமானாலும் நீங்கள் நன்றி சொல்லலாமே ?

தமிழ்ச் சமுதாயத்திலே, மாதவம் போற்றிடும் பெண் குலத்தை மாசுபடுத்துவதற்காகத் தாங்கள் இப்