பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை


புதினத்தைத் தயாரித்திருக்கிறீர்கள் !’—சரளாவின் கட்சி இது. கட்சி என்று எழுதுவதைவிட, குற்றச்சாட்டு என்றே எழுதிவிடுவது தான் பொருத்தம்.

“இல்லை, இல்லை ; பெண் குலத்தைத் தூய்மைப் படுத்தவே நான் இக்கதையை எழுதியிருக்கிறேன் !’ பெண்ணுடன் போட்டி போட்டுக் கொண்டு நீங்கள் கச்சை கட்டிப் பேசியிருக்கிறீர்கள். உங்கள் பேச்சிலே பயம் தொனிக்கிறது நீங்கள் உணர்வீர்களோ, என்னவோ ? நான் உணருகிறேன். உங்களுடைய அந்தப் பயம் வாழட்டும் ! ஏனெனில், அந்தப் பயம் தான் உங்களுக்கு அகல்யாவைப் பற்றி - அதாவது இருபதாம் நூற்றாண்டைச் சார்ந்த பதில் வெட்டு அகல்யா'வைப் பற்றி எழுத உங்களுக்குத் ‘துணிச்சலை’ வழங்கியிருக்கிறது. அந்தத் ‘துணிச்சலை’யும் வாழ்த்தத்தான் வேண்டும்.

அகல்யா ! - சிரிப்புக்குரிய ஓர் அபலை. காதலை நம்பி, வாழ்க்கையைக் கை நழுவ விட்ட பைத்தியக்காரி !

கனகலிங்கம் ! - அனுதாபக்குரிய ஒர் அப்பாவி ! வாழ்க்கையை நம்பி உயிரைக் கை நழுவ விட்டவன்.

‘உறங்குவது போலும் சாக்காடு’ என்கிறார்கள் அனுபவசாலிகள். அந்தத் தூக்கத்தில் அகல்யாவையும் கனகலிங்கத்தையும் கட்டுண்டிருக்கச் செய்து விட்டீர்கள். நீங்கள் உங்களுக்கு எவ்வளவோ வேலை மிச்சம். “நல்லவர்கள் வாழ்வதில்லை” என்ற அபாய அறிவிப்பு வரிகளுடன் நீங்களும் ‘கோழித் தூக்கம்’ போட ஆரம்பித்து விட்டீர்கள். உங்களது இந்தத் தூக்கம் தான் எனக்கு விழிப்புச் சக்தியைக் கொடுத்திருக்கிறது. வாழ்க ! உங்கள் உறக்கம் !

சந்தேகமே இல்லை. கனகலிங்கம் அப்பாவிதான். முப்பது நாட்களுக்கு கிட்டும் முப்பது ரூபாய்ச் சம்பளத்தினால் அறுதல் கனியாவிட்டாலும், அந்தப் புத்தகக்