பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 65



குள்ளாகவே, அவள் தசரத குமாரனைப் பின் தொடர வேண்டியவள் ஆகிறாளே ? அகல்யாவிடம் நமக்குக் கனியும் பச்சாதாபம், பரிவு, பாசம் போன்ற சகல உணர்ச்சிகளும் இந்த இடத்தில்தான் நம்மை விட்டுப் பிரிகின்றன. பிரிந்து அகல்யாவின் கால் அடிகளில் தஞ்சம் புகுகின்றனவா ? அன்று. கடலில் குதித்துத் தற்கொலை செய்து கொள்ளுகின்றன!

‘வாழ்வுக்கு உதவி கேட்ட, இந்தக் காதல் பைத்தியம்” பெண்களின் பெயரால் வற்புறுத்தப்படும் கற்பின் பெயரால் சாக விரும்பாதவளென நீங்கள் வரம்பு வகுத்து, இறுதியில் தெய்வத்துக்குப் பதிலாக நீங்களே ‘சூத்திரதாரி’யாக ஆக்ட் பண்ணி அவளைக் கொன்றிருக்கிறீர்கள். பாவம், அகல்யா!

‘எல்லாவற்றையும் வேடிக்கையாகக் கருதுவதால்தான் என்னால் உயிர் வாழ முடிகிறது’ என்கிறான் கனகலிங்கம். காதலினால் சாண் வயிற்றைத் திருப்திப்படுத்த முடியாதென்று இந்திரனால் பாடம் படித்துக் கொடுக்கப்பட்ட அகல்யாவின் கதையைக் கேட்ட பிறகே அவன் இவ்வாறு சொல்கிறாள். நெருங்கி வந்தவளிடமிருந்து விலகும் கனகலிங்கம். ‘வேண்டாம்’ பசி தீர்ந்து விட்டால் நானும் இந்திரனைப் போல் ஒட்டம் பிடித்தாலும் பிடித்து விடுவேன்” என்றும் அறிவிக்கிறான். அவள் ஒட்டி ஒட்டி வரும்போது, அவனோ எட்டி எட்டி போகிறான், சிறு சலசலப்பு. ‘ஐயோ, பாவம்! உலகம் தெரியாத அபலை அவள் காதலை உண்மையென்று நம்பினாள்; அந்தக் காதலுக்காகத் தன்னை ஒருவனுக்கு அர்ப்பணித்தாள். அவன் அவளைக் கைவிட்டான். அதற்காக அவள் செத்துப் போக விரும்பவில்லை; வாழ விரும்புகிறாள். ஆண்களுக்கு மட்டும் அந்த உரிமையை அளிக்கும் சமூகம், பெண்களுக்கு அளிக்க மறுக்கிறது—இது அக்கிரமம்தானே ?’ என்ற கண நேர மெளனச்சிந்தனை அவனது தயாள சிந்தையின் கதவுகளைத்